Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக:

தமிழகத்தில் அடுத்தடுத்து ஐந்து புயல்கள் உருவாகிறதா?
தமிழகத்தில் அடுத்தடுத்து வரிசையாக ஐந்து புயல்கள்
உருவாகவிருப்பதாக பரவும் செய்தி முற்றிலும் தவறானதாகும்.

நிர்மலா சீதாராமன் ‘டிக்கெட் வாங்க முடியாதவர்கள் ஊட்டி செல்ல ஏன் ஆசைப்படவேண்டும்’ என்றாரா?
நிர்மலா சீதாராமன், ஊட்டி மலை ரயில் விவகாரம் குறித்து 3000
ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாதவர்கள் ஊட்டி செல்ல ஏன்
ஆசைப்படவேண்டும் என்று கூறியதாகப் பரவும் புகைப்படத்தகவல் போலியானதாகும்.

ரஜினிகாந்த் தமிழக முதல்வராகப் பதவியேற்கிறாரா?
ரஜினிகாந்த் தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார் என்பதாகப் பரவும்
புகைப்படம் தவறானதாகும்.

எட்டு வழிச்சாலைத் திஎட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு தடையா?ட்டத்திற்கு தடையா?
சேலம்-சென்னை இடையேயான எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்ததாக திருமாவளவன் கூறியுள்ளார். ஆனால் அது தவறானத் தகவலாகும்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பணம் கொடுத்து ஆள் சேர்க்கப்படுகிறதா?
டெல்லி சலோ போராட்டத்தில் நபர் ஒருவருக்கு ரூ.350 கொடுத்து ஆள் சேர்க்கப்படுவதாக கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. ஆனால் அது தவறானத் தகவலாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)