Saturday, February 21, 2026

Fact Check

தமிழகத்தின் புதிய ஆளுநராக கிரண் பேடி பதவியேற்க உள்ளாரா?

banner_image

கிரண் பேடி அவர்கள் தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்கவிருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழகத்தின் அடுத்த ஆளுநராக கிரண் பேடி பதவியேற்க உள்ளதாக பரவும்  தகவல்

கிரண் பேடி அவர்கள் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கடந்த 2016 ஆம் ஆண்டு பதவியேற்றார். அவர் பதவியேற்றதிலிருந்து அவருக்கும்,  அச்சமயத்தில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிகாரர்களுக்கும் இடையே ஏழாம் பொருத்தமாகவே இருந்தது.

கிரண் பேடி மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிட்டு தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துகின்றார் என்று காங்கிரஸார் குற்றம் சாட்டினர். பதிலுக்கு கிரண்பேடி அவர்களும் மாநில அரசு மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை வைத்தார்.

மாநில அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே நடந்த இந்த அதிகாரப் போரில் பாதிக்கப்பட்டதென்னவோ வெகுஜன மக்கள்தான்.  ஏறக்குறைய 5 வருடங்களாக மாநில அரசுடன் போட்டியிட்ட கிரண் பேடி அவர்களை, கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவித்தது மத்திய அரசு.

இதன்பின்பு தமிழிசை சௌந்திரராஜன் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் பொறுப்பு தரப்பட்டது. இவர் பதவியேற்று அடுத்து சில நாட்களிலேயே காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, தற்போது புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைப்பெற்று வருகின்றது.

புதுச்சேரிக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து காங்கிரஸ் கட்சி அங்கு மிகப்பெரிய ஆளுமை சக்தியாக விளங்கி வந்தது. ஆனால் நடந்து முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 15 இடங்களில் போட்டியிட்டு, வெறும் 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிப் பெற்றுள்ளது.

இதனடிப்படையில் பார்க்கும்போது இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என்பது உறுதியாக தெரிகின்றது. காங்கிரஸ் கட்சியின் இந்த வீழ்ச்சியில் கிரண் பேடியின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

இந்நிலையில் அடுத்ததாக கிரண் பேடி அவர்கள் தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்க இருக்கின்றார் எனும் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழகத்தின் அடுத்த ஆளுநராக கிரண் பேடி பதவியேற்க உள்ளதாக பரவும்  பதிவு -1

Archive Link: https://archive.ph/XB2Up

தமிழகத்தின் அடுத்த ஆளுநராக கிரண் பேடி பதவியேற்க உள்ளதாக பரவும்  பதிவு -2

Archive Link: https://archive.ph/qnmlQ

தமிழகத்தின் அடுத்த ஆளுநராக கிரண் பேடி பதவியேற்க உள்ளதாக பரவும்  பதிவு -3

Archive Link: https://archive.ph/gGGbf

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

கிரண் பேடி அவர்கள் தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்கவிருக்கின்றார் எனும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இத்தகவல் உண்மைதானா என்பதை அறிய, கிரண் பேடி அவர்களையே தொடர்புக் கொண்டு இதுக்குறித்துக் கேட்டோம்.

இதற்கு கிரண் பேடி அவர்கள்,

எனக்கு இத்தகவல் குறித்து எதுவும் தெரியாது. இதுபோன்ற எந்த உத்தரவும் எனக்கு மத்திய அரசிடமிருந்து வரவில்லை. இதுபோன்ற உண்மையில்லாத செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம்

என்று நமக்கு பதிலளித்தார்.

கிரண் பேடி அவர்களின் இந்த பதிலின் அடிப்படையில் காணும்போது, கிரண் பேடி தமிழகத்தின் புதிய ஆளுநராக பதவியேற்க உள்ளார் என்று பரப்பப்படும் செய்தி பொய்யானது என்பது நமக்கு உறுதியாகின்றது.

Conclusion

தமிழகத்தின் புதிய ஆளுநராக கிரண் பேடி பதவியேற்க உள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் பொய்யான ஒன்று என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False/ Fabricated

Our Sources

Ms. Kiran Bedi’s Testimonial:-


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

14,935

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage