Saturday, February 21, 2026

Fact Check

கடனுதவி பெறுவதற்காக அமெரிக்கா சென்றாரா பிரதமர் மோடி?

banner_image

பிரதமர் மோடி கடனுதவி பெறுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பிரதமர் மோடி கடனுதவி பெறுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளதாக பரவும் நியூஸ்கார்ட்

பிரதமர் மோடி அவர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்ச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று அமெரிக்கா சென்றார்.

Also Read: நான் நிதியமைச்சராக இருக்கும் வரை பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர விட மாட்டேன் என்றாரா பிடிஆர்?

இந்த விஷயமானது ஊடகங்களில் மிகப்பெரிய செய்திப் பொருளாக அமைந்த நிலையில், உலக வங்கியிடம் மூன்றரை லட்சம் கோடி டாலர்கள் கடன் வாங்கவே பிரதமர் அமெரிக்கா சென்றதாக புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பிரதமர் மோடி கடனுதவி பெறுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளதாக பரவும் நியூஸ்கார்ட்  - 1

Twitter Link | Archive Link

பிரதமர் மோடி கடனுதவி பெறுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளதாக பரவும் நியூஸ்கார்ட்  - 2

Facebook Link

பிரதமர் மோடி கடனுதவி பெறுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளதாக பரவும் நியூஸ்கார்ட்  - 3

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

பிரதமர் மோடி கடனுதவி பெறுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவியதைத் தொடர்ந்து, உண்மையிலேயே இவ்வாறு ஒரு செய்தியை புதிய தலைமுறை வெளியிட்டதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.

இந்த தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது. பிரதமர் மோடி அமெரிக்க சென்ற தகவலை மற்ற ஊடகங்கள் போல் புதிய தலைமுறையும் செய்தியாக வெளியிட்டிருந்தது.

Archive Link

இச்செய்தியில் பயன்படுத்தப்பட்டிருந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட பொய் தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்துக் கேட்டோம். அவரும்,

“வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது. இந்த நியூஸ்கார்டை நாங்கள் வெளியிடவில்லை”

என்று நமக்கு விளக்கமளித்தார்.

Also Read: கொடநாடு வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டதுபோல் ஈபிஎஸ் நடிக்கின்றார் என்றாரா மயில்சாமி?

மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது கடனுதவி பெறுவதற்காக பிரதமர் அமெரிக்கா சென்றார் என்று பரவும் நியூஸ்கார்ட் பொய்யானது என்பது தெளிவாகின்றது.

Conclusion

பிரதமர் மோடி கடனுதவி பெறுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Puthiya Thalaimurai


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

14,935

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage