Fact Check
நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவிலான தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு கூறியதா?
நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த அனுமதி கோரியுள்ளதாக தமிழக அரசு கூறியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

இந்தியாவில் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள சிபிஎஸ்சி தேர்வுகள், பிளஸ் 2 தேர்வுகள் உள்ளிட்டவை குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் மத்திய அரசினால் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சரான திரு.பொன்முடி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்தபிறகு செய்தியாளர்களுக்கு பதிலளித்த அமைச்சர்கள், “நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவில் தேர்வு நடத்த அனுமதி கோரியுள்ளோம். மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளாதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்” என்னும் செய்திப்புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவிலான தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகப் பரவும் செய்தியின் உண்மைத்தன்மை குறித்து அறிய அமைச்சர்களின் முழு பேட்டியையும் ஆராய்ந்தோம்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “நீட் தேர்வு நடத்தப்படக் கூடாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் தேவையென்றால் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ளுங்கள்” என்கிற கருத்தை வலியுறுத்திக் கூறியதாக தெரிவித்துள்ளார்.

சன் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள யூடியூப் காணொளியில் “மருத்துவ மாணவர்கள் தேர்வுக்கு 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் மூலமான தேர்வையே தொடர்வதா?” என்கிற கேள்விக்கு “ஆம் நீட் தேர்வே வேண்டாம். மாநிலத்தில் முதலில் நடந்த தேர்வையே தொடரவும், மத்திய அரசின் கீழ் உள்ள இடங்களில் மட்டும் நீட் நடத்திகொள்ளவும் கோரிக்கை வைத்து உள்ளோம்” என்று அவர் கூறியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
அதாவது, மாணவர்களை மருத்துவப் படிப்புக்கு தேர்வு செய்ய பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடே பழைய முறை போல தொடரும் என்கிற அர்த்ததில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதனை முதலில் தவறாக புரிந்து கொண்டு குறிப்பிட்ட செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், பின்னர் அவர்கள் அச்செய்தியை சரியான முறையில் திருத்தி விட்டனர்.

எனினும், தவறாக பதிவிடப்பட்ட இச்செய்திப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவுகிறது என்பதும் நமக்கு உறுதியானது.

தவறான புரிதலில் வெளியானது

திருத்தி வெளியிடப்பட்டது
Conclusion:
நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவிலான தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானது. இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading/Partly False
Our Sources:
Sun News: https://youtu.be/mPvl9ZWo-bU
Thanthi Tv: https://www.facebook.com/ThanthiTV/photos/a.372693046192379/4119947938133519/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)