Thursday, August 27, 2026

Fact Check

கோயில்களில் அனைவரையும் அனுமதிக்கக் கூடாது என்றாரா யோகி ஆதித்யநாத்?

banner_image

கோயில்களில் அனைவரையும் அனுமதிக்கக் கூடாது எனும் தொனியில் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாகக் கூறி புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.

கோயில்களில் அனைவரையும் அனுமதிக்கக் கூடாது என்று யோகி பேசியதாக பரவும் செய்தி
Source: Facebook

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (31-ம் தேதி) கோவை வந்தார்.

பிரச்சாரக் கூட்டத்தில்  யோகி பேசும்போது, கோயில்களில் அனைவரையும் அனுமதிக்கக் கூடாது எனும் தொனியில், “கோயில்களின் புனிதம் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக கோயில்களில் ரயில் நிலையத்தைப் போல் அனைவரும் வந்துப் போவதைக் காண முடிகிறது”  என்று பேசியதாக நியூஸ் 7 தமிழின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கோயில்களில் அனைவரையும் அனுமதிக்கக் கூடாது என்று யோகி பேசியதாக பரவும் பதிவு - 1
Source: Facebook

Archive Link: https://archive.ph/FFxdj

கோயில்களில் அனைவரையும் அனுமதிக்கக் கூடாது என்று யோகி பேசியதாக பரவும் பதிவு - 2
Source: Facebook

Archive Link: https://archive.ph/1gHnw

கோயில்களில் அனைவரையும் அனுமதிக்கக் கூடாது என்று யோகி பேசியதாக பரவும் பதிவு - 3
Source: Facebook

Archive Link: https://archive.ph/2rQbQ

சமூக வலைத்தளங்களில் இப்புகைப்படச் செய்தியை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

கோயில்களில் அனைவரையும் அனுமதிக்கக் கூடாது என்று யோகி பேசியதாக பரவும் பதிவுகள்
Source: Facebook

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதுபோல், கோயில்களில் அனைவரையும் அனுமதிக்கக் கூடாது எனும் தொனியில் யோகி ஆதித்யநாத் பேசினாரா என்பதை அறிய, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப் பக்கங்களில் இவ்வாறு ஒரு புகைப்படச் செய்தி பதிவிடப்பட்டுள்ளதா என்பதை தேடினோம்.

அவ்வாறு தேடியதில், இப்புகைப்படச் செய்தியின் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மை குறித்து நம்மால் அறிய முடிந்தது. உண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்ட போலியான ஒன்றாகும்.

இத்தகவலை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியே தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் உறுதி செய்திருந்தது.

கோயில்களில் அனைவரையும் அனுமதிக்கக் கூடாது என்று யோகி பேசியதாக பரவும் தகவலின் உண்மைத்தன்மை
Source: Twitter

Archive Link: https://archive.ph/CWZz7

இதன் அடிப்படையில் பார்க்கும்போது கோயில்களில் அனைவரையும் அனுமதிக்கக் கூடாது எனும் தொனியில்  யோகி ஆதித்யநாத் பேசியதாக பரவும் புகைப்படச் செய்தி பொய்யான ஒன்று என்பது நமக்கு தெளிவாகிறது.

Conclusion

கோயில்களில் அனைவரையும் அனுமதிக்கக் கூடாது எனும் தொனியில் யோகி ஆதித்யநாத் பேசியதாகப் பரப்பப்படும் புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

News 7 Tamil: https://twitter.com/news7tamil/status/1377232729163530241


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

14,935

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage