Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பிரதமர் தொடங்கி வைத்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் தரை தட்டியதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.
பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை (13/01/2023) அன்று உலகின் நீளமான ஆற்றுவழி சொகுசு பயணமான கங்கா விலாஸ் ஆற்றுப்பயணத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் இந்த சொகுசு கப்பல் தரை தட்டி நின்றதால் இப்பயணம் தடைப்பட்டதாக செய்தி ஒன்று ஊடகங்களில் வந்துள்ளது.



ஊடகங்கள் வெளியிட்ட இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அண்ணாமலை பேசியதாகப் பரவும் பேச்சாளர் பெருமாள் மணியின் படையப்பா வெற்றி விழா உரை வீடியோ!
பிரதமர் தொடங்கி வைத்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் தரை தட்டியதாக ஊடகங்களில் செய்தி வந்ததை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். இந்த ஆய்வில் இத்தகவல் தவறானது என அறிய முடிந்தது.
இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் இத்தகவலை மறுத்துள்ளது. இதுக்குறித்து இந்த ஆணையம் வெளியிட்டிருந்த டிவீட்டில்,
கங்கா விலாஸ் சொகுசு கப்பல் திட்டமிட்டபடி பாட்னாவை சென்றடைந்தது. கங்கா விலாஸ் சாப்ரா பகுதியில் தரை தட்டியதாக வெளிவந்த செய்தி உண்மையில்லை. கங்கா விலாஸ் திட்டமிட்டபடி அதன் பயணத்தை தொடரும்
என்று உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தின் தலைவர் சஞ்சய் பந்தோபாத்யாயா தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மத்திய அரசின் பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோவும் ஊடகங்கள் வெளியிட்ட இச்செய்தி பொய்யானது என்று தெரிவித்துள்ளது.
Also Read: இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் தலைவாழை விருந்து என்று பரவும் கனடா வீடியோ!
பிரதமர் தொடங்கி வைத்த கங்கா விலாஸ் சொகுசு கப்பல் தரை தட்டியதாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Tweet from @IWAI_ShipMin Dated Jan 16, 2023
Tweet from @PIBFactCheck Dated Jan 16, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vasudha Beri
June 19, 2024
Ramkumar Kaliamurthy
June 14, 2024
Ramkumar Kaliamurthy
May 31, 2024