Saturday, June 6, 2026

Fact Check

முதலமைச்சர் ஸ்டாலினின் பேரன் என்று புனே இளைஞனின் படத்தை பரப்பும் நெட்டிசன்கள்! 

banner_image

முதலமைச்சர் ஸ்டாலினின் பேரன் என்று கூறி இளைஞன் ஒருவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

முதலமைச்சர் ஸ்டாலினின் பேரன் என்று பரவும் படம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் சபரீசன் தம்பதிகளின் மகன் என்று குறிப்பிட்டு, உடல் முழுவதும் கிலோ கணக்கில் தங்கத்தாலான அணிகலன்களை அணிந்திருக்கும் இளைஞன் ஒருவரின் புகைப்படம்  ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

முதலமைச்சர் ஸ்டாலினின் பேரன் என்று பரவும் படம் - 01
Screenshot from Twitter @Vinothkumar2214
முதலமைச்சர் ஸ்டாலினின் பேரன் என்று பரவும் படம் - 02
Screenshot from Twitter @SudarshanTheva3

இப்புகைப்படத்தை நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் டிப்லைன் எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு அனுப்பி வாசகர் ஒருவரும் இதுக்குறித்து கேட்டிருந்தார்.

இதனையடுத்து சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாரத் ஜோடோ யாத்திரையின் நடுவில் சிக்கனுடன் மது அருந்தினாரா ராகுல் காந்தி? உண்மை என்ன?

Fact Check/Verification

முதலமைச்சர் ஸ்டாலினின் பேரன் என்று  கூறி இளைஞன் ஒருவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.

முன்னதாக சபரீசன்- செந்தாமரை தம்பதிகளின் பிள்ளைகள் குறித்து ஆராய்கையில் அவர்களுக்கு நிலா, நளன் என்று இரண்டு பிள்ளைகள் இருப்பதை அறிய முடிந்தது.

இவர்களின் அண்மைய புகைப்படம் குறித்து தேடியதில் _sabsveda_ என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர்களது படம் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

Instagram will load in the frontend.

ஆனால் இப்படத்தில் காணப்படும் சபரீசன் மகனின் முகத்தோற்றமானது வைரலாகும் படத்திலிருக்கும் இளைஞரின் தோற்றத்திலிருந்து மாறுப்பட்டிருந்ததை காண முடிந்து.

இதனையடுத்து வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் இளைஞர் குறித்து தேடினோம். இதில் அவர் புனேவை சார்ந்தவர் என்றும், இவர் பெயர் ஹர்ஷ்வர்தன் பந்தர்கர் என்றும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக அறிய முடிந்தது.  

Instagram will load in the frontend.

தொடர்ந்து தேடியதில் வைரலாகும் இத்தகவல் கடந்த 2019 ஆண்டிலிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருவதையும், அதை மறுத்து ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளையும் காண முடிந்தது. அவற்றை இங்கே, மற்றும் இங்கே காணலாம். 

Also Read: கொடநாடு பெயரை கேட்டவுடன் சட்டசபையை விட்டு வெளியேறினாரா எடப்பாடி பழனிசாமி?

Conclusion

முதலமைச்சர் ஸ்டாலினின் பேரன் என்று  கூறி சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இளைஞனின் புகைப்படம் சபரீசன் மகனின் புகைப்படம் அல்ல என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.    

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Instagram Post from _sabsveda_
Instagram Post from harshvardhan_pandharkar_


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

14,935

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage