Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இலவச பேருந்துகளில் பெண்கள் விரும்பினால் பணத்தை தந்து டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாட்டு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.
தமிழக முதல்வராக கடந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்றவுடன் ஐந்து புதிய திட்டங்களில் தொடங்க கையெழுத்திட்டார். இதில் முக்கியமானது சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் எனும் திட்டமாகும். இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஏறக்குறைய 15 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், இத்திட்டம் குறித்த பல்வேறு சர்ச்சைகள் சமீப காலங்களில் எழுந்து வருவதை காண முடிகின்றது.
அமைச்சர் பொன்முடி ‘ஓசி பயணம்’ என்று இத்திட்டம் குறித்து குறிப்பிட்டதை தொடர்ந்து, ஓசி பயணம் வேண்டாம் என்று அரசு பேருந்துகளில் பெண்கள் பிரச்சனை செய்யும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது.
இந்நிலையில், அரசு பேருந்துகளில் இலவச டிக்கெட்டிற்கு பணம் கொடுக்க விரும்பும் பெண்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு டிக்கெட் தரலாம் என்று அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது.




ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கர்நாடகாவில் நுழைந்தவுடன் இந்துக்கள் உடைக்கு மாறினாரா ராகுல் காந்தி?
இலவச பேருந்துகளில் பெண்கள் விரும்பினால் பணத்தை தந்து டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாட்டு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டதாக ஊடகங்களில் செய்தி வந்ததை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் ஊடகங்கள் வெளியிட்ட இச்செய்தி பொய்யானது என்று தெரிய வந்துள்ளது. “மகளிர் இலவச பேருந்தில் விருப்பப்பட்டால் கட்டணம் என்பது ‘வதந்தி’. இலவச பேருந்து பயணம் செய்ய விரும்பாத பெண்களிடம் பணம் வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடுக்க வாய்மொழி உத்தரவிட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை” என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஊடகங்களில் வெளியிட்ட இச்செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையும் இச்செய்தி தவறானது என்று தெரிவித்துள்ளது.
Also Read: 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதியானவர் உயிருடன் உள்ளாரா?
இலவச பேருந்துகளில் பெண்கள் விரும்பினால் பணத்தை தந்து டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாட்டு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டதாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானது என்று ஊடகங்களில் வந்த செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Tweet, from S Sivasankar, Transport Minister, Tamilnadu, on October 4, 2022
Tweet, from the Department of Information and Public Relations (DIPR) on October 4, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 30, 2023
Ramkumar Kaliamurthy
November 6, 2023
Ramkumar Kaliamurthy
February 28, 2023