Thursday, April 23, 2026

Fact Check

‘விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்குது…’ வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!

banner_image

விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்குது என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்குது என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோ

“விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்குது. போலீஸுக்கே தண்ணிகாட்டும் திமுகவினர். அதிகாரம் கண்ணைக் கட்டுது. ஆணவம் தலை தூக்குது. கண்டுகொள்ளத்தான் ஆள் இல்லை. விடியல் ஆட்சியில் காவலர்களுக்கே இந்த கதி என்றால் பெண்களின் நிலைமை…!” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இவ்வீடியோவில் நான்கு இளைஞர்கள் சேர்ந்து பணியில் இருக்கும் காவலர் ஒருவரை தாக்குகின்றனர். இவ்வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பதிவு செய்து வருகின்றனர்.

விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்குது என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோ   - 01

Twitter Link | Archive Link

விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்குது என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோ   - 02

Facebook Link

விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்குது என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோ   - 03

Facebook Link

Also Read: என் காலில் விழுந்து பதவி பெற்ற நாய் ஒன்று கட்சியை கவ்வி சென்றுவிட்டது என்றாரா சசிகலா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்குது என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, வைரலாகும் வீடியோவை ஒவ்வொரு புகைப்படமாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் தற்போது நடந்ததல்ல, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்தது என்பதை அறிய முடிந்தது. அத்தருணத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்தது அதிமுக என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் அச்சமயத்தில் செய்தி வந்திருந்ததை காண முடிந்தது.

Screenshot of Indian Express Tami's Article
Screenshot of Indian Express Tami’s Article

சென்னை கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் இரவு நேரத்தில் திருநங்கையிடம் 4 பேர் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அந்நேரத்தில் ரோந்து வந்த போலீஸ் கான்ஸ்டபிள் கார்த்திகேயன் அவர்களை கிளம்ப சொல்லியும், அவர்கள் கிளம்பாததால் கார்த்திகேயன் அவர்களை லத்தியால் அடிக்க முயன்றுள்ளார். உடனே அவரின் லத்தியை பிடுங்கி, அவரை கீழே தள்ளி அந்த நால்வரும் அவரை தாக்கியதாக  இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் வீடியோவில் காணப்படும் அந்த நால்வரும் கல்லூரி மாணவர்கள் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு குறித்து மேலும் சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

Also Read: வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காப்பியடிக்கப்பட்டதா?

Conclusion

விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்குது என்று குறிப்பிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு சமீபத்தில் நடந்தது அல்ல, அது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது நடந்தது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: Missing Context

Sources

Article Published by Indian Express Tamil Dated on 21/06/2019
Article Published by NDTV Dated on 22/06/2019
Article Published by The News minuite Dated on 21/06/2019
Article Published by India Times Dated on 22/06/2019


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

14,935

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage