Ramkumar Kaliamurthy
-

லடாக் பகுதியில் இந்திய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வதந்தி
லடாக் பகுதியில் M-17 ரக இந்திய ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதாக சமூக வலைத்தளங்களில் செய்திப் பரவி வருகிறது. Fact Check/Verification இந்திய – சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் லடாக்கில் இந்திய M-17 ரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சமூக வலைத் தளங்களில் பரப்பப்படும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இச்செய்தியை ஆராய…
-

சூர்யா இஸ்லாமிய மதத்துக்கு மாறியதாக வதந்தி
நடிகர் சூர்யா இஸ்லாமிய மதத்துக்கு மாறியதாக சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. Fact Check/Verification சமீபத்தில் நடிகர் சூர்யா நீட் தேர்வு குறித்த தனது நிலைப்பாட்டை ஒரு பதிவாக டிவிட்டரில் பகிர்ந்தார். இப்பதிவானது பாஜகவினரிடம் மிகப்பெரியக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்பின் சூர்யாவுக்கு எதிராக பலரும் பலக் கருத்துகள் மற்றும் குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்து வருகின்றனர். இதில் ஒன்றாக, நடிகை ஜோதிகா ஒரு இஸ்லாமியப் பெண் என்றும் அவரை மணப்பதற்காக இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும்…
-

காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவியா?
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்குத் துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்று மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் போடப்பட்டதாக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. Fact Check/Verification கடந்த வெள்ளிக்கிழமை (11/09/2020) அன்று சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் கே.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதன்பின் இச்செயற்குழுக் கூட்டத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு முதலமைச்சர் பதவியும் காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவியும் தரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்தி…
-

விஷால் பாஜகவில் இணையவிருப்பதாக வதந்தி
நடிகர் விஷால் பாஜகவில் இணையவிருப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. Fact Check/Verification சுஷாந்த் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மகாராஷ்டிரம் மாநிலம் குறித்துத் தவறாகப் பேசியதால் அவருக்கும் மகாராஷ்ட்ராவில் ஆளும் கட்சியாக இருக்கும் சிவசேனா கட்சிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசும் கங்கனாவின் பாதுகாப்புக்காக அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பைக் கொடுத்துள்ளது. இந்த பரப்பான சூழலில் நடிகர் விஷால் கங்கனாவைப் பாராட்டி…
-

பெண்ணின் வயிற்றிலிருந்து 4 அடி பாம்பு எடுத்ததாக வதந்தி
ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து 4 அடி அளவுள்ள பாம்பு எடுக்கப்பட்டதாக சமூக வலைத் தளங்களில் செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. Fact Check/Verification சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அவ்வீடியோவில் ஒரு மருத்துவர் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து 4 அடி நீளமுள்ள ஏதோ ஒன்றை எடுக்கிறார். அவ்வீடியோ உங்களுக்காக: இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். வீடியோவில் காணப்படும் அந்தப் பெண் ரஷ்யாவின் தகெஸ்தாமனைச் சார்ந்தவர் என்றும் அவர் வயிற்றிலிருந்து பாம்பு…
-

யுவன் சங்கர் ராஜா சாதிக்கு எதிராக டீ-சர்ட் அணிந்தாரா?
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா “ஜாதி வேண்டாம் போடா” என்ற வாசகம் அடங்கிய டீ-சர்ட் அணிந்தவாறு காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. Fact Check/Verification “குருவி உட்கார பனம்பழம் விழுந்தது” என்ற பழமொழிக்கு ஏற்ப கடந்த வாரம் யுவன் ஷங்கர் ராஜாவும் நடிகர் ஷிரிஷும் இணைந்து எடுத்த ஒரு புகைப்படம் தமிழக அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்புகைப்படம் காரணமாக “இந்தி_தெரியாது_போடா” எனும் ஹேஷ்டேக் உருவாகி, அது உலகம் முழுவதும் ட்ரெண்டானது.…
-

எஸ்.பி.பிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையா?
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவிருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. Fact Check/Verification பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கொரானா பாதிப்புக் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சைப் பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பி அவர்கள் கடந்த திங்கட்கிழமை(07/09/2020) அன்று கொரானாத் தாக்குதலில் இருந்து முழுமையாக விடுபட்டார். கொரானா நீங்கினாலும், கொரானாவின் தாக்கத்தினால் எஸ்.பி.பி அவர்களின் நுரையீரல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அதை சரிசெய்வதற்கான சிகிச்சை நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில்…
-

இந்தி தெரியாது என்றால் பாகிஸ்தானுக்கு போய் விடுங்கள் என்று பாஜக மாநில இளைஞரணி தலைவர் கூறினாரா?
இந்தி தெரியாது என்றால் பாகிஸ்தானுக்கு போய் விடுங்கள் என்று பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ்.ப.செல்வம் அவர்கள் கூறியதாக இருக்கும் நியூஸ்கார்ட் ஒன்றை பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார். Fact Check/Verification இன்று இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் தேசியக் கல்விக் கொள்கை. இந்தப் புதியக் கொள்கைக்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அதிலும் இக்கொள்கையின் ஒரு அங்கமாக விளங்கும் மும்மொழிக் கொள்கை, இந்தியைப் புகுத்துவதற்கு வழிகோலும் என்பதால் இக்கொள்கை பலத்த…
-

பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்தால் சொத்தில் பங்கில்லையா?
பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்பவர்களுக்கு பெற்றோரின் சொத்தில் பங்கில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாக செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வளம் வருபவர் ஆரத்தி. இவர் தமிழ் தவிர, தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் ஒன்றில் இவரும் பங்குப்பெற்றார். இவர் அண்மையில் இவரது டிவிட்டர் பக்கத்தில் பாலிமர் தொலைக்காட்சியின் நியூஸ் கார்ட் ஒன்றை பகிர்ந்தார்.…
-

தமிழகத்தில் செப்டம்பர் 14-ல் பள்ளி, கல்லூரிகள் திறப்பா?
வரும் செப்டம்பர் 14 முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கவிருப்பதாக சமூக வலைத் தளங்களில் செய்திப் பரவி வருகிறது. Fact Check/Verification சமீபத்தில் தமிழக அரசின் அரசாணை ஒன்று வாட்சப் மூலமாகவும் இதர சமூக வலைத்தளங்களின் மூலமாகவும் பரவி வருகிறது. அதில் தமிழகத்தில் வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து,…