Ramkumar Kaliamurthy
-

தமிழகத்தில் பாஜக கூட்டணி தோற்றதை பட்டாசு வெடித்து கொண்டாடினாரா எஸ்.வி.சேகர்?
தமிழகத்தில் பாஜக கூட்டணி தோற்றதை எஸ்.வி.சேகர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். எஸ்.வி.சேகரே இத்தகவலை மறுத்துள்ளார்.
-

CISF காவலர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த கைத்தடமா இது?
CISF காவலர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்ததால் அவரின் கன்னத்தில் CISF காவலரின் கைத்தடம் பதிந்ததாக பரவும் புகைப்படத் தகவல் முற்றிலும் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் படத்திலிருப்பது கங்கனா ரனாவத்தின் கன்னமே அல்ல; விளம்பர நடிகை ஒருவரின் கன்னமாகும்.
-

மீண்டும் பிரதமராக விருப்பமில்லை என்றாரா மோடி?
மீண்டும் பிரதமராக விருப்பமில்லை என்று மோடி கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

அண்ணாமலை ஒரு பூத்தில் ‘ஒத்த ஓட்டு’ மட்டும் வாங்கினாரா?
அண்ணாமலை ஒரு பூத்தில் ஒத்த ஓட்டு மட்டும் வாங்கியதாக கூறி பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் அந்த பூத்தில் அண்ணாமலை 101 ஓட்டு வாங்கியுள்ளார்.
-

இந்தியா கூட்டணியினரையும் ராகுல் காந்தியையும் மம்தா பானர்ஜி திட்டினாரா?
இந்தியா கூட்டணியினரையும் ராகுல் காந்தியையும் மம்தா பானர்ஜி திட்டியதாக பரப்பப்படும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும்.
-

நாதக-5, பாஜக கூட்டணி-0; வைரலாகும் புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு உண்மையானதா?
“நாதக 5 இடங்களில் வெற்றி பெறும்; பாஜக கூட்டணி பூஜ்ஜிய இடங்களையே பெறும்” என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்ட போலி புகைப்படமாகும்.
-

‘கோ பேக் மோடி’ பதாகையுடன் முதியவர் ஒருவர் நிற்பதாக பரவும் எடிட் படம்!
முதியவர் ஒருவர் கோ பேக் மோடி பதாகையுடன் நிற்பதாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும். உண்மையில் அப்படத்தில் இருப்பவர் பிரதமருக்கு ஆதரவான வாசங்களுடனே அப்பதாகையை பிடித்திருந்தார்.
-

சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் காலணியை நக்கியவர் என்று இழிவாக பேசினாரா அண்ணாமலை?
சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் காலணியை நக்கியவர் என்று அண்ணாமலை கூறியதாக பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும். அண்ணாமலை சாவர்க்கருக்கு ஆதரவாக பேசிய வீடியோவில் ஒரு பகுதியை மட்டும் வைத்து இந்த பொய் தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.
-

பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறையின் சாவியுடன்தான் மோடி திரும்ப செல்வார் என்று அண்ணாமலை கூறினாரா?
தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறையின் சாவியுடன்தான் திரும்ப செல்வார் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
-

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக சத்தியம் செய்தனரா?
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக கூறி சத்தியம் செய்ததாக பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோவில் இருப்பவர்கள் இந்தியாவிற்கு உட்பட்ட உரி பகுதியை சார்ந்தவர்களாவர்.