Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
நடிகர் வினு சக்ரவர்த்தி பாஜகவில் இணைந்தார் என்கிற செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் வலம் வருகிறது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகளில் தேர்தலைத் தொடர்ந்து பல்வேறு நடிகர், நடிகைகளும் கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என பல்வேறு கட்சியினரும் தேர்தல் அறிக்கை, மக்களை மகிழ்விக்கும் வகையிலான அறிவிப்புக்கள், வாக்குறுதிகள் என்று நாளொரு அறிவிப்பும் பொழுதொரு ஐடியாவுமாக வலம் வருகின்றனர்.
இன்னொரு பக்கம், கூட்டணிக் கட்சிகள் விலகல், மற்றொரு கட்சியில் இணைதல் என தேர்தல் திருவிழா ஜெகஜோதியாக துவங்கியுள்ளது. கொரோனாவையே பின்னுக்குத் தள்ளி தேர்தல் செய்திகள் இடம் பிடித்து வருகின்றன.
இதற்கிடையில், கட்சிகளில் இணையும் நடிகர் நடிகைகள், முக்கிய பிரபலங்கள் குறித்த வதந்திகளுக்கும் சமூக வலைத்தளங்களில் குறைவில்லை.
அதில், உச்சகட்டமாக நடிகர் வினு சக்ரவர்த்தி பாஜகவில் இணைந்தார் என்கிற செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. ட்விட்டரில் மய்யம் பாய் என்பவர் இந்த செய்தியை ஷேர் செய்துள்ளார்.
Archived Link: https://archive.vn/jIAp5
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
நடிகர் வினு சக்ரவர்த்தி பாஜகவில் இணைந்தார் என்கிற பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிற நிலையில், அவர் உலகை விட்டுச் சென்று கிட்டதட்ட நான்கு வருடங்கள் ஆகின்றன.
கடந்த 2015 ஆம் வருடம், ஜூலை மாதம் 21 ஆம் தேதியன்று திடீரென்று மயக்கமடைந்த அவர் சென்னை வடபழனி தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை, விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்களும் அன்றைய காலகட்டத்தில் அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், ஏப்ரல் 27, 2017 ஆம் ஆண்டு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்செய்தியை, பல்வேறு முன்னணி ஊடகங்களும் வெளியிட்டிருந்தன.


இந்நிலையில், நான்கு வருடங்களுக்கு முன்னர் உலகை விட்டு மறைந்த நடிகர் வினு சக்ரவர்த்தியைத்தான் பாஜகவில் தற்போது இணைந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரப்பி வருகின்றனர். குறிப்பிட்ட அப்பதிவின் கீழேயே பலரும் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், அவரது மரணத்திற்கு முன்பாகவே பலமுறை அவர் காலமானதாக வதந்திகளும் பரவியது குறிப்பிடத்தக்கது.
நடிகர் வினு சக்ரவர்த்தி பாஜகவில் இணைந்தார் என்று வெளியாகிய சமூக வலைத்தளப்பதிவு தவறானது என்பதையும், அவர் நான்கு வருடத்திற்கு முன்பே மண்ணை விட்டு மறைந்துவிட்டார் என்பதையும் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Cineulagam: https://www.cineulagam.com/events/10/118145?ref=fb-cineulagam
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
May 10, 2024
Ramkumar Kaliamurthy
May 3, 2024
Vijayalakshmi Balasubramaniyan
April 24, 2024