Fact Check
பாம்பு கடித்த இளைஞருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் கங்கையில் மிதக்க வைத்ததால் உயிரிழந்தாரா?
Claim: உத்திரப்பிரதேசத்தில் பாம்பு கடித்த இளைஞருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் கங்கையில் மிதக்க வைத்ததால் உயிரிழந்தார்.
Fact: இத்தகவல் தவறானதாகும். அவர் உயிரிழந்ததாக மருத்துவர் அறிவித்தப்பின், இறந்த அவரின் உடலே கங்கை நீரில் மிதக்க வைக்கப்பட்டுள்ளது.
“மூடநம்பிக்கையால் பறிப்போன இளைஞரின் உயிர்! உபியில் மோகித் குமார்(20) என்பவரை பாம்பு கடித்துள்ளது. ஓடும் கங்கை நீரில் உடலை வைத்தால் விஷம் நீங்கும் என்று கூறப்பட்டதால் அவரது உடலை 2 நாட்களாக அவரது குடும்பத்தினர் கங்கையில் மிதக்க வைத்திருந்தனர். இறுதியில் அவர் உயிரிழந்துவிட்டார்!” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

