Fact Check
Fact Check: ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் பணம் பெற்ற அரசியல் தலைவர்கள் என்று பரவும் செய்தி உண்மையா?
Claim: ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் பெற்ற அரசியல் தலைவர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது.
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று புதியதலைமுறை 2018ஆம் ஆண்டே விளக்கமளித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் பணம் பெற்ற அரசியல் தலைவர்கள் என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பல்வேறு அரசியல் தலைவர்களின் பெயர்களுடன் கூடிய பட்டியலாக இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது. இதுகுறித்து, நமது NewsChecker டிப்லைனில் வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழகத்திற்கு தர முடியாது என்றதா மத்திய அரசு?
Factcheck / Verification
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் பணம் பெற்ற அரசியல் தலைவர்கள் என்று பரவுகின்ற நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
”மக்களைத் தூண்டி விட்டு ஸ்டெர்லைட்டை மூடிவிட்டனர்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்திய நிகழ்வொன்றில் பேசியதைத் தொடர்ந்தே இந்த நியூஸ்கார்ட் பரப்பப்பட்டு வருகிறது என்பதை அறிய முடிந்தது.
வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து ஆராய்ந்தபோது அது கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்தே பரவி வருகிறது என்பதை அறிய முடிந்தது.
செய்திகளிலும் கடந்த ஆண்டுகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து பெற்ற நிதி குறித்து இடம்பெற்றுள்ளதே தவிர தனித்தனியான அரசியல் பிரமுகர்கள் குறித்த எந்த தகவல்களும் வெளியாகியிருக்கவில்லை. அதுகுறித்த செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே படியுங்கள்.
இதுகுறித்து மேலும் தேடியபோது, கடந்த 2018ஆம் ஆண்டே இந்த நியூஸ்கார்ட் பரவிய நிலையில், புதியதலைமுறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில், “புதிய தலைமுறையின் பெயரில் இதுபோன்ற போலியான தகவல் பரப்பப்படுகிறது, யாரும் நம்ப வேண்டாம். பிற தொலைக்காட்சிகள் பெயரிலும் இதேபோன்ற தகவல் பரப்பப்படுகிறது” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Also Read: ஸ்டெர்லைட் ஆலை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும் என்றாரா கனிமொழி?
Conclusion
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் பணம் பெற்ற அரசியல் தலைவர்கள் என்று பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Tweet from PuthiyathalaimuraiTV, Dated May 24, 2018
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)