Fact Check
எடப்பாடி பழனிசாமி கட்சியின் பெயர் கூட அறியாதவர் என்றாரா செல்லூர் ராஜு?
Claim: எடப்பாடி பழனிசாமி கட்சியின் பெயர் கூட அறியாதவர் – செல்லூர் ராஜு
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியானதாகும். புதிய தலைமுறையும் அதிமுக தரப்பும் இதை தெளிவு செய்துள்ளது.
சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் தமிழக ஆளுநரின் ஆரியம் –திராவிடம் குறித்த கருத்து குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இக்கேள்விக்கு அறிஞர்கள்தான் கூற வேண்டும்; நான் அந்த அளவுக்கு படித்தவன் அல்ல என்று எடப்பாடி பழனிசாமி பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில் “கட்சியின் பெயரோ கொள்கையோ கூட தெரியாத சாதாரணத் தொண்டன் கூட அதிமுகவில் தலைவர் ஆகலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஆரியம்- திராவிடம் குறித்து எதுவும் தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அடையார் ஆனந்த பவன் சங்கிகளுக்கு அனுமதி இல்லை என்றதா?
Fact Check/Verification
எடப்பாடி பழனிசாமி கட்சியின் பெயர் கூட அறியாதவர் என்று செல்லூர் ராஜு கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக செல்லூர் ராஜு மேற்கண்ட கருத்தை தெரிவித்தாரா என்று ஆராய்ந்தோம். அதில் இவ்வாறு ஒரு கருத்தை செல்லூர் ராஜு பேசியதாக எந்த ஒரு தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யனை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் “இத்தகவல் முற்றிலும் பொய்யானது” என்று பதிலளித்தார்.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இத்தேடலில் புதிய தலைமுறை இவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை.
இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.
Also Read: காமாக்யா தேவியின் முகம் 15 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்கு காட்டப்படுகிறதா?
Conclusion
எடப்பாடி பழனிசாமி கட்சியின் பெயர் கூட அறியாதவர் என்று செல்லூர் ராஜு கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Phone conversation with Kovai Sathyan, Spokesperson, AIADMK
Phone conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)