Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

பெண்கள் விரும்பினால் இலவசப் பேருந்துகளில் பணத்தை தந்து டிக்கெட் பெறலாம் என்றதா போக்குவரத்து கழகம்?
இலவச பேருந்துகளில் பெண்கள் விரும்பினால் பணத்தை தந்து டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாட்டு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டதாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானதாகும்.

கர்நாடகாவில் நுழைந்தவுடன் இந்துக்கள் உடைக்கு மாறினாரா ராகுல் காந்தி?
இந்திய ஒற்றுமை பயணம் கர்நாடகாவில் நுழைந்தவுடன் ராகுல் காந்தி இந்துக்கள் உடைக்கு மாறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதியானவர் உயிருடன் உள்ளாரா?
300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் உள்ளதாக வீடியோ தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
