Fact Check
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பதவியேற்க உள்ளாரா?
சைலேந்திர பாபு அவர்கள் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக பதவியேற்கவிருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக முதல்வராக பதவி ஏற்கவே இல்லை. ஆனால் அதற்குள் சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் பரப்பும் ஆசாமிகளின் தங்கள் வேலையை ஆரம்பித்து விட்டனர்.
வரவிருக்கும் திமுக ஆட்சிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. முன்னதாக திமுக ஆட்சியை கட்டுக்குள் கொண்டு வர கிரண்பேடி அவர்களை தமிழக ஆளுநராக நியமிக்கவிருப்பதாக தகவல் ஒன்று பரவியது. இத்தகவலை நியூஸ்செக்கர் சார்பில் ஆராய்ந்து, அது முற்றிலும் பொய்யான செய்தி என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கி இருந்தோம்.
அச்செய்தியைப் படிக்க: https://beta.newschecker.mobiux.xyz/ta/fact-checks-ta/kiran-bedi-governor-of-tn
இதனைத் தொடர்ந்து, சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைக்க ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு அவர்கள் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார் எனும் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Archive Link: https://archive.ph/mGVst

Archive Link: https://archive.ph/zCiZG

Archive Link: https://archive.ph/PyXer
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
சைலேந்திர பாபு அவர்கள் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக பதவியேற்கவிருக்கின்றார் எனும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இத்தகவல் உண்மைதானா என்பதை அறிய, சைலேந்திர பாபு அவர்களையே தொடர்புக் கொண்டு இதுக்குறித்துக் கேட்டோம்.
இதற்கு சைலேந்திர பாபு அவர்கள்,
“எனக்கு அதிகாரப்பூரமாக எந்த உத்தரவும் கிடைக்கவில்லை.”
என்று பதிலளித்தார்.
சைலேந்திர பாபு அவர்களின் இந்த பதிலைக் காணும்போது, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு உறுதியாகின்றது. சைலேந்திர பாபு அவர்கள் தற்போது ரயில்வே போலீஸின் டிஜிபியாக உள்ளார்.
Conclusion
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் பொய்யான ஒன்று என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False/ Fabricated
Our Sources
Mr. Sylendra Babu, DGP of Railways:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)