Ramkumar Kaliamurthy
-

மு.க.ஸ்டாலின் அவர்கள் “திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக ஆட்சி கலைக்கப்படும்” என்று கூறியதாக வதந்தி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக ஆட்சி ஒரு நொடியில் கலைக்கப்படும்” என்று கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact Check/ Verification வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வென்று, ஆட்சியைப் பிடித்தே ஆக வேண்டும் என்ற நோக்கில் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகவும் பரபரப்பாக களப்பணி ஆற்றி வருகின்றார். கிராம சபை கூட்டம் என்ற பெயரில் “அதிமுகவை நிராகரிப்போம்” எனும் பதாகைகளுடம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பிரச்சாரம்…
-

திருவள்ளுவர் சிலைக்கும் திமுகவுக்கும் தொடர்பில்லையா?
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதற்கும் திமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பரவி வருகின்றது. தமிழக சுற்றுலாத் தளங்களில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை மிகவும் இன்றியமையாதது. திருக்குறளில் இருக்கும் 133 அதிகாரங்களை குறிப்பிடும் வகையில் 133 அடியில் இச்சிலை உருவாக்கப்படுள்ளது. இச்சிலையானது கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. திமுகவின் சாதனைகளுள் ஒன்றாக இச்சிலைத் திறப்பும் குறிப்பிடப்பட்டு வருகின்றது.…
-

முதல்வரை சந்திக்க மறுத்தாரா நிர்மலா சீதாராமன்?
தமிழக முதல்வரை சந்திக்க நிர்மலா சீதாராமன் அவர்கள் மறுத்ததாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact Check/ Verification கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சர் சீதாராமன் அவர்களை சந்திக்க தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் டெல்லி சென்றார். இச்சந்திப்பின் பின்னணியில் எந்த ஒரு அரசியல் காரணமும் இல்லை, இச்சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று துணை முதல்வர் தரப்பிலிருந்து கூறப்பட்டது. ஆனால் முன் அனுமதி இல்லாததால் தமிழக துணை முதல்வரை…
-

கொரானா தடுப்பூசி செலுத்தி 23 முதியவர்கள் உயிரிழந்ததாக வதந்தி
கொரானா தடுப்பூசி செலுத்தி 23 முதியவர்கள் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது. Fact Check/ Verification கடந்த சனிக்கிழமையன்று நாடு முழுவதும் முதற்கட்ட கொரானா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைப்பெற்றது. இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொரானா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல் தடுப்பூசியை மருத்துவ கவுன்சிலின் தலைவர் செந்தில்…
-

முதல் தடுப்பூசி தூய்மை பணியாளருக்கு செலுத்தப்பட்டதா?
தமிழகத்தில் முதல் கொரானா தடுப்பூசி தூய்மை பணியாளரான முத்துமாரி என்பவருக்கு செலுத்தப்படவிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. Fact Check/ Verification உலகையே அச்சுறுத்தி வந்த பெருந்தொற்றான கொரானாவுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு இன்று (16/01/2020) நடைப்பெற்று வருகிறது. இந்நிகழ்வை பிரதமர் மோடி அவர்கள் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் முதல் கொரானா தடுப்பூசி…
-

சீமான் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சென்றாரா?
சீமான் அவர்கள் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சென்றதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact Check/ Verification தீவிரமான கடவுள் மறுப்பு கொள்கையும், திராவிட மறுப்பு கொள்கையும் உடையவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். குறிப்பாக கூற வேண்டுமென்றால் ஆரிய வழிபாட்டைத் தொடர்ந்து எதிர்த்து பேசி வருகின்றார். தமிழ்நாட்டில் இருக்கும் கோவில்களுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும், புராணக் கடவுள்களை மறுத்து குலதெய்வ வழிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என மதம் குறித்தும்,…
-

ரசிகர்களை கடிந்து கொண்டாரா ரஜினிகாந்த்?
ரஜினிகாந்த் தனது ரசிகர்களை கடிந்து அறிக்கை ஒன்றை விடுத்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது. Fact Check/ Verification 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களமே பரபரப்பாக உள்ளது. இந்த பொதுத் தேர்தலில் அனைவரும் எதிர்பார்த்த மிகப்பெரிய விஷயம் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகை. ஆனால் ரஜினிகாந்த் அவர்கள் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்து விட்டார். இதற்கு காரணமாக தன் உடல்நிலையை காரணம் காட்டியுள்ளார் ரஜினிகாந்த். ஆனால் இம்முடிவை…
-

ஹெச்.ராஜா பெட்ரோல், டீசல் விலையுயர்வை கண்டித்து ஊர்வலம் சென்றாரா?
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஹெச்.ராஜா அவர்கள் மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்றதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது. Fact Check/ Verification வரும் 2021 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அனைத்து கட்சிகளும் மக்களிடம் நன்மதிப்பை பெற விதவிதமான வாக்குறுதிகளை கூறி வருகிறது. கூடவே போராட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றையும் நடத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழக பாஜகவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான ஹெச்.ராஜா அவர்கள்…