Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக:

ரஜினிகாந்த் தனது ரசிகர்களை கடிந்து அறிக்கை ஒன்றை விடுத்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது. ஆனால் இது எடிட் செய்யப்பட்டப் புகைப்படமாகும்.

தமிழகத்தில் முதல் கொரானா தடுப்பூசி தூய்மை பணியாளரான முத்துமாரி என்பவருக்கு செலுத்தப்படவிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

வாட்ஸ்அப் விரைவில் முடக்கப்படும். 48 மணி நேரத்திற்குள் டெலிட் செய்யப்படும். இந்த மெசேஜை பத்து பேருக்கு அனுப்புங்கள்; நீல நிற டிக் பெற்று கட்டணம் இன்று வாட்ஸ்அப் உபயோகியுங்கள் என்பதாக வெளியான தகவல் போலியானதாகும்.

இஸ்லாமியர்கள் சிலர், இவ்வாறு மற்ற இனக்குழுக்களை கேலி செய்யும் வகையிலான வாசகங்களுடன், கையில் கத்தி, கம்புடன் போஸ் கொடுத்ததாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.

மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்து குடித்தால் உடலில் இருக்கும் கொரோனா நம்மை விட்டு ஓடிவிடும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியதற்கு அறிவியல் ரீதியில் எவ்வித ஆதாரமும் இல்லை.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)