Ramkumar Kaliamurthy
-

மோடி தனக்கென்று தனிவிமானம் வாங்கினாரா?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மக்கள் வரிப்பணத்தில் தனக்கென்று சொகுசு தனிவிமானம் வாங்கியதாக குற்றச்சாட்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. கரூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கும் ஜோதிமணி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்திய வரலாற்றிலேயே எந்த ஒரு பிரதமரும் தனக்கென தனி விமானத்தை வாங்கியதில்லை. ஏர் இந்தியா விமானத்தையே பயன்படுத்துவது வழக்கம். ஆனால் ஏழைத்தாயின் மகன் 8000 கோடி ரூபாய் பொதுமக்கள் வரிபணத்தில் சொகுசு தனிவிமானம் வாங்கியிருக்கிறார். என்று மோடிக் குறித்து குற்றச்சாட்டு…
-

அடல் சுரங்கப்பாதை என்று தவறானப் புகைப்படத்தைப் பரப்பும் ஊடகங்கள்
அடல் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறக்கப்பட்டது. அடல் சுரங்கப்பாதைத் திறப்புக் குறித்து சமூக வலைத் தளங்களில் பகிர்ந்தபோது, கூடவே புகைப்படத்தையும் சேர்த்து பகிர்ந்து, அதுதான் அடல் சுரங்கப்பாதை என்றும் கூறி வருகின்றனர். இதேப் புகைப்படத்தை ஏசியாநெட் நியூஸ், பாலிமர் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்களும் பயன்படுத்தி உள்ளன. Fact Check/Verification இமாச்சலப் பிரதேசத்தில் மாபெரும் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கப்பாதைக்கு மறைந்த முன்னாள் பிரதமர்…
-

வைரலானப் பதிவில் இருந்தவர் கிர்சாய்தா ரோட்ரிக்ஸா?
கிர்சாய்தா ரோட்ரிக்ஸ் என்கிற பெண்ணின் பதிவு ஒன்று தற்சமயம் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. இப்பதிவின் கூடவே மொட்டைத் தலையுடன் ஒரு பெண்ணின் புகைப்படமும் இணைக்கப்பட்டு, அவர்தான் கிர்சாய்தா ரோட்ரிக்ஸ் என்று கூறப்பட்டு வருகிறது. Fact Check/Verification தற்சமயம் சமூக வலைத்தளங்களில், “உலகப் புகழ்பெற்ற டிசைனர் கிர்சாய்தா ரோட்ரிக்ஸ் அவர்கள் கடைசியாக எழுதிய வார்த்தைகள்” என்று கூறி பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. கூடவே ஒரு பெண்ணின் புகைப்படத்தையும் இணைத்து அவர்தான் கிர்சாய்தா ரோட்ரிக்ஸ் என்று பதிவிடப்பட்டு…
-

அடல் சுரங்கப்பாதைக்கு வாஜ்பாய் அவர்கள் அடிக்கல் நாட்டினாரா?
அடல் சுரங்கப்பாதைத் திறப்பு விழாவில் பாரதப் பிரதமர் மோடி அவர்கள், இத்திட்டத்தை மறைந்த வாஜ்பாய் அவர்கள் 2002 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார் என்று பேசியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளன. Fact Check/Verification இமாசலப் பிரதேசத்தின் மணாலி முதல் லடாக்கின் லே பகுதி வரை 9.02 கி.மீ தொலைவுக்கு மிக நீண்ட சுரங்கப்பாதை ஒன்று இந்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இச்சுரங்கப்பாதைக்கு முன்னாள் பாரதப் பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் நினைவாக ‘அடல் சுரங்கப்பாதை’…
-

வேளாண் மசோதாக்களை எதிர்த்து கூடிய கூட்டமா இது?
நாடாளுமன்றத்தில் புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஜல்லிக்கட்டு – வீரவிளையாட்டு எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் “விவசாயிகளின் போராட்டம் மறைக்கப்படுவது ஏன்? ஜனநாயகம் உயிர்த்தெழட்டும்.” எனத் தலைப்பிட்டு, ஒரு மாபெரும் கூட்டம் போராடுவதுபோல் போன்ற ஒரு படம் பகிரப்பட்டுள்ளது. Fact Check/Verification இந்தியா முழுவதும் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களை எதிர்த்து மபெரும் போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. குறிப்பாக ஹரியானா, குஜராத் போன்ற மாநிலங்களில் இப்போராட்டம் மிகக் கடுமையாக…
-

ஹத்ராஸ் சம்பவத்தில் கொலையுண்ட பெண் இவரா?
ஹத்ராஸ் கூட்டு பலாத்கார சம்பவத்தில் உயிரிழந்தப் பெண்ணின் படம் என்று ஒரு படம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. Fact Check/Verification உத்திரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியைச் சார்ந்த பட்டியலினப் பெண் ஒருவர், மேல் ஜாதியைச் சார்ந்த நான்கு ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இளம்பெண் செப்டம்பர் 29 ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தால் நாடே கொந்தளிப்பில் உள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள்,…
-

சிலை மனிதர் தாஸ் அவர்கள் இறந்ததாக வதந்தி
சென்னை விஜிபி தங்க கடற்கரையில் சிலை மனிதராக இருக்கும் தாஸ் அவர்கள் இறந்ததாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பரவி வருகிறது Fact Check/Verification சென்னையின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் விஜிபி தங்கக் கடற்கரையும் ஒன்றாகும். விஜிபி தங்கக் கடற்கரையின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அங்கிருக்கும் சிலை மனிதர்களாவர். இந்த அறிவியல் வளர்ச்சி உலகில் சேர்ந்தார்போல் ஒரு மணி நேரம் கூட நம்மால் நிற்க முடியவில்லை. ஆனால் இந்த சிலை மனிதர்கள் உடலில் சிறு…
-

வேளாண் மசோதாவை எதிர்த்து டிராக்டரை எரித்தது விவசாயிகளா?
டெல்லியில் புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து, விவசாயிகள் டிராக்டரை எரித்ததாக செய்தி ஒன்று ஊடகங்களில் வெளிவந்துள்ளது. Fact Check/Verification பாஜக தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் மூன்று புதிய வேளாண் மசோதாக்களை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, அதைச் சட்டமாக நிறைவேற்றியது. இதை அடுத்து, நாடு முழுவதும் இச்சட்டத்தை எதிர்த்துப் போராட்டங்கள் வெடித்துள்ளது. குறிப்பாக, பஞ்சாப், அரியானாப் போன்ற வட மாநிலங்களில் இப்போராட்டங்கள் கடும் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று(28/09/2020) டெல்லி…