Ramkumar Kaliamurthy
-

துணைக் குடியரசுத் தலைவர் அவர்களின் மகள் எஸ்.பி.பியின் மருத்துவக் கட்டணங்களை சரிசெய்ததாக வதந்தி
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மருத்துவக் கட்டணங்களை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்களின் மகள் சரிசெய்தார் என்று ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. Fact Check/Verification பாடகர், இசையமைப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர் என பன்முகங்களைக் கொண்டிருந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். கொரானாவில் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். தொடர் சிகிச்சையின் பலனாக அவர் கொரானாவிலிருந்து விடுபட்டார். ஆயினும் கொரானாக் காரணமாக அவர் நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. ஆகவே அதற்குரிய சிகிச்சை…
-

ராஜ்ய சபா எம்.பி பதவி கொடுத்தால், மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன் என்று அண்ணாமலை கூறியதாக வதந்தி
தனக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன் என்று பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி பாரதிய ஜனதாக் கட்சியில் இணைந்தார். பாஜகவில் இணைந்த அவருக்கு தமிழக பாஜகவின் துணைத் தலைவர் பதவித் தரப்பட்டது. அண்ணாமலை அவர்கள் பாஜகவில் இணைவதற்கு முன்பிலிருந்தே பல விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தார். தற்போது…
-

‘ரத்தம் சொட்ட நிற்கிறார்கள்’ என்று அண்ணாமலை கூறினாரா?
பாஜகவினர் திமுகவை எதிர்த்து கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை சமூக வலைத்தளங்களங்களில் இருப்போர் கிண்டலடித்தனர். இதனை விமர்சித்து தமிழக பாஜகவின் துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அவரது சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டதாக சமூகவலைத்தளங்களில் செய்தி ஒன்று பரப்பப்படுகிறது. Fact Check/Verification கடந்த திங்கட்கிழமை(21/10/2020) அன்று சுவர் விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட பிரச்சனைக் காரணமாக பாஜக மற்றும் திமுகவினருடையே மிகப்பெரியத் தகராறு ஏற்பட்டது. இதன்பின் பாஜகவினர் கை மற்றும் தலையில்…
-

கட்டுடன் பாஜகவினர்: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
பாஜகவினர் திமுகவை எதிர்த்து கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி கட்டுடன் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை கிண்டலடிக்கும் வகையில் நெட்டிசன்கள் பலர் சமூக வலைத்தளங்களங்களில் பதிவுகள் இட்டு வருகின்றனர். Fact Check/Verification கடந்த திங்கட்கிழமை(21/10/2020) அன்று சுவர் விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட பிரச்சனைக் காரணமாக பாஜக மற்றும் திமுகவினருடையே மிகப்பெரியத் தகராறு ஏற்பட்டது. வாய்த் தகராறில் தொடங்கிய இப்பிரச்சனை கடைசியில் கைக்கலப்பில் போய் முடிந்தது. இப்பிரச்சனைக் குறித்துப் புதிய தலைமுறையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இப்பிரச்சனையின் தொடர்ச்சியாக பாஜகவினர்…
-

அதிமுக அரசால் தஞ்சையில் கோயில் இடிக்கப்பட்டதா?
தஞ்சாவூரில் ஆளும் அதிமுக அரசு இந்து மதத்திற்கு எதிராக மிகப்பெரிய சிவலிங்கத்தை உடைய கோயிலை இடிப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் பரப்பப்படுகிறது. Fact Check/Verification தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அவ்வீடியோவில் ஒரு பெரிய லிங்கம் இடிக்கப்பட்டு கீழே விழுகிறது. அவ்வீடியோ உங்களுக்காக: அதிமுக அரசின் அராஜகப் போக்கினால்தான் இதுப்போன்ற சம்பவங்கள் நடக்கின்றது. இது இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துமாறு உள்ளதாகவும், இதைத் தட்டிக் கேட்க யாரும் இல்லையா என்று…
-

சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் தருவதாக வதந்தி
நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் பரிசு தருவதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. Fact Check/Verification நடிகர் சூர்யா நீட் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை கூறியப்பின் அவருக்கெதிராக பலரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள் சூர்யாவை செருப்பால் அடித்தால் ஒரு இலட்சம் தருவதாக அறிவித்ததாகவும் அதற்கு சூர்யா, என்னை அடிப்பதால்…
-

வைரலானத் தம்பதிகள் 7 மாதங்களில் பிறந்தவர்களா?
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தம்பதிகள் 7 மாதங்களில் பிறந்தவர்கள் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்படுகிறது. Fact Check/Verification இலங்கையைச் சார்ந்த புகைப்படக் கலைஞரான தீக்ஷனா D. முதுஷன் என்பவர் செப்டம்பர் 19 அன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புதிதாக திருமணமான தம்பதி இருவரின் புகைப்படத்தை வெளியிட்டார். இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது. இப்புகைப்படங்களைக் கண்ட இணையவாசிகள் குழந்தைத் திருமணம் என்று கிண்டலடித்தனர். குழந்தைத் திருமணம் என்று முதலில் கிண்டலடித்த இணையவாசிகள், பின்னர் திடீரென்று…
-

பாஜக பிரமுகர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அத்துமீறினாரா?
பிரபல இந்தித் தொலைக்காட்சியான ஜீ தொலைக்காட்சி நடத்தும் நடன நிகழ்ச்சியான டான்ஸ் இந்தியா நிகழ்ச்சியில் நொய்டாவைச் சார்ந்த பாஜக பிரமுகரும் அவரின் மகனும் நடுவர்களை மிரட்டியதாக வீடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. Fact Check/Verification இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஜீ தொலைக்காட்சி நிறுவனமும் ஒன்றாகும். இந்நிறுவனம் டான்ஸ் இந்தியா டான்ஸ் எனும் நடன நிகழ்ச்சியைக் கடந்த 2009 ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது. இந்த டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியில் நடந்த நிகழ்வு…