Vijayalakshmi Balasubramaniyan
-

திமுக பிரமுகர்கள் பாமக எம்.எல்.ஏ பெயரில் போலி டோக்கன் கொடுத்து கைதானதாக செய்தி வெளியானதாக வதந்தி!
திமுக பிரமுகர்கள் சிலர், பாமக எம்.எல்.ஏ பெயரில் ஓட்டுக்கு பணம் வழங்க டோக்கன் கொடுத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்பதாக நியூஸ்7 நிறுவனம் செய்தி வெளியிட்டதாகப் பரவிய புகைப்படம் தவறானதாகும்.
-

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர் ரூபாய் 4 லட்சம் நிதி உதவி பெறுவதற்கான படிவமா இது?
கொரோனாவால் இறந்தவர்களுக்கு மத்திய அரசு, பேரிடர் மேலாண்மை அமைச்சகத்தில் இருந்து அவர்களுடைய குடும்பத்தினருக்கு ரூபாய் 4 லட்சம் நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்ப படிவம் என்று பரவும் தகவல் தவறானதாகும்.
-

மாணவிகள் மட்டும் படிக்கும் பள்ளிகளில் ஆசிரியைகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாரா அமைச்சர் அன்பில் மகேஷ்?
மாணவிகள் மட்டுமே படிக்கும் மகளிர் பள்ளிகளில் முழுக்க முழுக்க ஆசிரியைகளை மட்டும் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாகப் பரவிய செய்தி தவறான புரிதலால் வெளியாகியுள்ளது.
-

நீரவ் மோடி 13 ஆயிரம் கோடியில் 32% தவிர மீதியை பிஜேபி தலைவர்கள் பிரித்துக் கொண்டனர் என்றாரா?
நீரவ் மோடி, 13000 கோடியில் தனக்கு 32% மட்டுமே கிடைத்ததாகவும் மற்றவை எல்லாம் பாஜக தலைவர்களால் பிரித்துக் கொள்ளப்பட்டதாகவும், தான் இந்தியாவில் இருந்து தப்பி ஓடவில்லை; நாடு கடத்தப்பட்டேன் என்று லண்டன் நீதிமன்றத்தில் கூறியதாகப் பரவுகின்ற செய்தி ஆதாரப்பூர்வமற்றது.
-

சென்னையின் பிரபலமான தேவி தியேட்டர் நிரந்தரமாக மூடப்படுகிறதா?
சென்னையின் பிரபலமான தேவி தியேட்டர் வளாகம் விரைவில் மூடப்பட உள்ளதாக பரவிய செய்தி தவறானதாகும்.
-

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பின்னால் சர்ச்சைக்குரிய தலைப்பில் புத்தகமா?
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றில் அவருக்கு பின்புறம் உள்ள ஷெல்பில் “இந்தியாவை கிறிஸ்துவ நாடாக மாற்றுவது எப்படி?” என்கிற புத்தகம் இருந்ததாகப் பரவுகின்ற புகைப்படம் போலியானதாகும்.
-

பிரதமர் மோடி எவ்வித பாதுகாப்பும் இன்றி கொரோனா வார்டைப் பார்வையிட்டாரா?
பிரதமர் மோடி எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் கண்டதாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.
-

தளர்வுகள் அற்ற ஊரடங்கை முன்னிட்டு தென்காசியில் விற்றுத் தீர்ந்ததா பஜ்ஜி போண்டா மாவு?
தளர்வுகள் அற்ற ஊரடங்கை முன்னிட்டு தென்காசியில் பஜ்ஜி மற்றும் போண்டா செய்ய உபயோகிக்கப்படும் மாவு பாக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாகப் பரவிய செய்தி உண்மையில்லை.
-

நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவிலான தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு கூறியதா?
நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவிலான தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகப் பரவும் செய்தி தவறானதாகும்.