Vijayalakshmi Balasubramaniyan
-

கொரோனா தடுப்பு மருந்திற்காக மும்பை வந்துள்ள விமானம் எனப் பரவும் தவறான புகைப்படம்!
கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தினை, 2 மில்லியன் டோஸ் அளவிற்கு எடுத்துச் செல்ல பாரதப் பிரதமர் மோடி அனுமதி அளித்ததன் அடிப்படையில் பிரேசில் நாட்டு சிறப்பு விமானம் மும்பை வந்துள்ளது. உலகைக் காக்கும் மோடிஜி அரசு என்பதாகப் புகைப்படம் ஒன்று ஷேர்சாட் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact Check/ Verification: இந்தியா முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பமாகியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி, நாடுமுழுவதும் முதற்கட்டமாக கோவிட்-19…
-

ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சீனிவாசன் திமுகவில் இணையவில்லை!
ரஜினி மக்கள் மன்றத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளரான கே.வி.எஸ்.சீனிவாசன் இன்று காலை திமுகவில் இணைந்ததாக செய்தி ஒன்று பரவியது. Fact Check/ Verification: ரஜினிகாந்த், கட்சி துவங்குவதாக அறிவித்தது துவங்கி, கட்சி துவங்கும் எண்ணத்தை கைவிட்ட பிறகும் கூட அவரையும் அவரது ரசிகர்கள், நலம் விரும்பிகளையும் சுற்றிச் சுழலும் பொய்ச்செய்திகளுக்குப் பஞ்சமில்லை. அவ்வகையில், தற்போது அவரது கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றச் செயலாளரான கே.வி.எஸ்.சீனிவாசன் என்பவர் இன்று காலை (17/01/2021) திமுகவின் இணைந்ததாக புகைப்படம் ஒன்று…
-

வாட்ஸ்அப் முடக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தாரா?
வாட்ஸ்அப் விரைவில் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து வந்த செய்தியின் அடிப்படையில் முடக்கப்படும் என்பதாக விவரிக்கும் தகவல் ஒன்றின் உண்மைத்தன்மை குறித்து அறிய அதனை எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தார் வாசகர் ஒருவர். Fact check/ Verification: வாட்ஸ்அப் செயலியானது இன்று ஒருவருக்கிடையேயான தொடர்பினை எளிதாக்கி இருக்கிறது. எங்கோ தொலைவில் இருந்தாலும், குடும்பத்துடன் இருப்பது போன்ற சூழலை இதுபோன்ற தகவல் பரிமாற்றச் செயலிகள் நமக்கு அளித்து வருகின்றன என்பதில் எவ்வித வேற்றுக்கருத்தும் இல்லை. எனினும், வாட்ஸ்அப் குறித்த வதந்திகளுக்கும்,…
-

மிளகு ரசம் குடித்தால் கொரோனா வைரஸ் உடலில் இருந்து போய்விடுமா?
மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்துக் குடித்தால் கொரோனா வைரஸ் நம் உடலை விட்டு ஓடிவிடும் என்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. Fact check/ Verification: கொரோனா வைரஸால் ஏற்படும் கோவிட்-19 உலகையே அச்சுறுத்தி வருகின்றது. மேலும், வந்தபின் உயிர்காக்கும் மருந்துகள் எதுவும் இதுவரையில் கோவிட்-19க்கு கண்டுபிடிக்கப்படவில்லை. வருமுன் காக்கும் வகையில், உலக நாடுகள் சிலவும், இந்தியாவும் தடுப்பூசிகளைக் கண்டறிந்து தற்போது மக்களுக்கு பயன்பாட்டிற்கு அளித்துள்ளன. அவற்றின் தடுக்கும் திறனும்…
-

இஸ்லாமியர்கள் சிலர் இப்படிக் கூறி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனரா?
இஸ்லாமியர்கள் சிலர், ‘ஆளோடு வந்தாலும் வேலோடு வந்தாலும் எங்கட்ட அடங்கி தான் போகனும். வீர துலுக்கன் டா’ என்று புகைப்படம் ஒன்றிற்கு போஸ் கொடுத்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact check/Verification: இந்தியா பல்வேறு இன, மொழி, மத வேறுபாடுகள் கொண்ட மக்கள் சகோதரத்துவத்துடன் வாழும் நாடு. எத்தனைப் பிரிவினைகள் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற சகோதரத்துவமானவர்களை கொண்ட ஒரு தேசம். ஆனாலும், அரசியல் செய்யும் ரீதியிலான காரணங்களுக்காக இனக்குழுக்கள் மீதான துவேச…
-

கேரள ரயில் நிலையம் ஒன்றில் மதச்சின்னமான சிலுவை நடப்பட்டுள்ளதா?
கேரள ரயில் நிலையம் ஒன்றில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் கிறிஸ்துவ மதச்சின்னமான சிலுவையை சிலர் பொருத்தியிருப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact check/Verification: கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கடவுளின் தேசம் கேரளாவிற்கு மதம் மற்றும் அரசியல் ரீதியிலான வதந்திகளும் புதிதல்ல. அவ்வகையில், கேரள ரயில் நிலையம் ஒன்றில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்ற ரயில்வே இடத்தில், பொதுமக்கள் புழங்கும் இடத்தில் கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்த சின்னமான சிலுவை நடப்பட்டுள்ளதாகப்…
-

மருத்துவர்கள் கோவிட்-19 தடுப்பூசியை ஆண்களுக்கு இந்த இடத்தில் பரிந்துரைத்தனரா?
மருத்துவர்கள், ஆண்கள் தங்களது ஆணுறுப்பில் கோவிட்-19 தடுப்பூசியை செலுத்திக் கொள்வதன் மூலமாக தடுப்பூசி விரைவாக உடல் முழுவதும் பரவுவதற்கு எளிதாக இருக்கும் என்று கூறியதாக சமூக வலைத்தளத்தில் செய்தி ஒன்று வைரலாகியது. Fact Check/Verification: 2021 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே கோவிட்-19 தடுப்பூசி குறித்த தவறான தகவல்கள்/பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பெருமளவு வைரலாகத் துவங்கி விட்டன. அதில் ஒன்றுதான், மருத்துவர்கள் ஆண்களுக்கு ஆணுறுப்பில் கோவிட்-19 தடுப்பூசியை பரிந்துரைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்ற தகவல் ஒன்று.…
-

மும்பை வான்வெளியில் கூடிநின்ற மேகங்களின் புகைப்படமா இது?
மும்பை வான்வெளியில் மேகக்கூட்டங்கள் தலையணைகளைப் போல ஒன்று கூடி நிற்கின்றன என்கிற தலைப்புடன் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact check/Verification: இயற்கை எப்பொழுதுமே வண்ணமயமான அற்புதங்களை நிகழ்த்தக் கூடியது. ஆலங்கட்டி மழை, வானவில், சிவந்த வானம் என்று அதற்கு உதாரணங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம். வான்வெளியிலும் அடிக்கடி பஞ்சுப்பொதி போன்று மேகங்கள் கூடி நிற்பதுவும் அற்புதமான இயற்கையின் கோலம். ஆனால், சமீபத்தில் அவ்வாறு மும்பை வான்வெளியில் மேகக்கூட்டங்கள் பஞ்சுப்பொதி போன்று கூடி நின்றதாகப்…
-

`தலைமை அறிவித்தால் குத்தாட்டம் ஆடி பிரச்சாரம் செய்வேன்’ என்றாரா குஷ்பு?
தலைமை அறிவித்தால் குத்தாட்டம் ஆடிக்கூட பிரச்சாரம் செய்யவிருப்பதாக பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்ததாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact check/Verification: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை 5 நாட்களில் அறிவிக்கும்” என்று பேசியிருந்தார். இந்த சூழ்நிலையில்தான், தான் சார்ந்திருக்கும்…
-

தமிழகப் பள்ளிக்கூடப் பாடநூலில் ஓரினச்சேர்க்கை பெற்றோர் பற்றிய பாடமா?
தமிழகப் பள்ளிக்கூடப் பாடநூல் ஒன்று, ஓரினச்சேர்க்கைப் பெற்றோரையும் எடுத்துக் காட்டும் வகையில் இரண்டு அப்பாக்கள்+குழந்தை, இரண்டு அம்மாக்கள்+குழந்தை என்கிற பாடத்திட்டம் இடம்பெற்றுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact Check/Verification: எல்.ஜி.பி.டி கம்யூனிட்டி என்று அழைக்கப்படும் ஒரே பாலினத்தவர்களுக்கு இடையே ஏற்படும் ஈர்ப்பு, ஓரினச்சேர்க்கை எனப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு, இதுகுறித்த வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம், சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களின் ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்று சட்டப்பிரிவு 377…