Vijayalakshmi Balasubramaniyan
-

குற்றவாளிகளை மத அடையாளத்துடன் காட்டும் ஊடகங்களுக்கு தடை என்றதா சென்னை உயர்நீதிமன்றம்?
குற்றவாளிகளை மத ரீதியாக, குறிப்பிட்ட மதங்கள் அடிப்படையில் இனம் பிரித்து செய்தி வெளியிடும் ஊடகங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். குறிப்பிட்ட ஊடகங்கள் தடை செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. Fact check/Verification: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஆனால், ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களோ, இனம் சார்ந்தவர்களோ குற்றவியல் நடைமுறைகளில் ஈடுபட்டால் அவர்கள் சார்ந்துள்ள இனக்குழுக்கள் முழுவதையுமே அதே கண்ணோட்டத்துடன் பார்க்கின்ற சிலரும் இங்கு இருக்கத்தான்…
-

மன்மோகன் சிங் ஜோ பிடனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டாரா?
மன்மோகன் சிங் அவர்கள், அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் பதவியேற்பு விழாவிற்கு அழைத்து கெளரவிக்கப்பட்டார் என்று செய்திப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact check/Verification: இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பொருளாதார நிபுணராக மக்களிடையே அறியப்பட்டவர். காங்கிரஸ் சார்பில் இந்தியாவின் 13வது பிரதமராக நியமனமாவதற்கு முன்பாக இந்திய நிதியமைச்சராக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சமீபத்தில் பதவியேற்ற ஜோ பிடனின் பதவியேற்பு விழாவில் முன்னாள் இந்தியப்…
-

ஹெச்.ராஜா பாஜகவைச் சேர்ந்த பெண்கள் குறித்து இப்படிச் சொன்னாரா?
ஹெச்.ராஜா, ‘ஒரு கையில் காயத்ரி ரகுராமையும், மறு கையில் கலா மாஸ்டரையும் கொண்டு செல்வோம்’ என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது போன்ற புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. Fact check/Verification: தமிழக பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய அங்கம் வகிப்பவர் ஹெச்.ராஜா. அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி சமூக வலைத்தளத்தில் வைரலாகும் இவர், சில நேரங்களில் அவர் கூறாத கருத்துக்களுக்காகக் கூட வைரலாவதுண்டு. அந்த வகையில் தற்போது, “ஒரு கையில் காயத்ரி ரகுராமையும் மறுகையில் கலா மாஸ்டரையும்…
-

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா நினைவிடம் குறித்து இப்படிக் கூறினாரா?
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அம்மா உயிருடன் இருந்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பான நினைவிடத்தை அவரால் அமைத்திருக்க முடியாது என்று கூறியதாக செய்திப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact Check/Verification: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வனத்துறை நிர்வாகத்தின் மந்திரியாகப் பதவி வகிப்பவர். அடிக்கடி சர்ச்சைப் பேச்சுகளில் சிக்கிக் கொள்வது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழக்கம். சமீபத்தில், மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளில் `இந்த ஆட்சி எவ்வளவு…
-

மாஸ்க் அணிந்துகொண்டு உணவு சாப்பிடாமல் புகைப்படத்திற்கு மட்டும் போஸ் கொடுத்தாரா ராகுல் காந்தி?
மாஸ்க் அணிந்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஈரோட்டில் மக்களுடன் அமர்ந்து உணவருந்தியபோது மாஸ்க்கினை கழட்டாமல், உணவும் உண்ணாமல் புகைப்படத்திற்கு மட்டும் போஸ் கொடுத்தார் என்கிற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact check/Verification: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். தொடர்ந்து, நேற்று ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, நெசவாளர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இந்நிலையில், ராகுல்…
-

ஆச்சி மசாலாவில் ஆண்மைக் குறைவு ஏற்படுத்தும் மருந்து கலக்கப்படுகிறதா?
ஆச்சி மசாலா பாக்கெட்டுகளில் கலப்படம் செய்யப்படுகிறது. ஆண்மைக்குறைவு உண்டாக்கும் மருந்துகள் கலக்கப்படுகிறது. அவர்களை கைது செய்துள்ளனர் அதிகாரிகள் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. அதனை நமக்கு அனுப்பி உண்மையறியும் சோதனை செய்யக் கேட்டிருந்தார் நியூஸ்செக்கர் தமிழ் வாசகர் ஒருவர். Fact Check/Verification: ஆச்சி மசாலா, தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மசாலா பொருட்கள் விற்பனை நிறுவனங்களில் ஒன்றாகும். மிளகாய் தூள், மஞ்சள் தூள் எனப் பல்வேறு உணவுப் பொருட்களும் இந்நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்,…
-

சசிகலாவை வரவேற்று ஓபிஎஸ் வாழ்த்து ட்விட் வெளியிட்டாரா?
சசிகலா, பரப்பன அக்ரஹார சிறையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அடைக்கப்பட்டுள்ள இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவர் விரைவில் குணமடைந்து வரவேண்டும் என்று ஓபிஎஸ் ட்விட் வெளியிட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா நடராஜன், சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைதண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, அனைந்திந்திய அண்ணா…
-

பெங்களூரு சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா நடராஜன் இவரா?
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா நடராஜன் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு, புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளது. Fact Check/ Verification: சசிகலா நடராஜன், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமானவர். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, வருகின்ற ஜனவரி 27 ஆம் தேதியன்று விடுதலையாக இருக்கிறார். இந்நிலையில், காய்ச்சல் மற்றும் சுவாசக்கோளாறால் திடீரென்று உடல்நலம் குன்றிய…
-

பாமக நிறுவனர் ராமதாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி வெற்றி குறித்து அறிக்கை விட்டாரா?
பாமக நிறுவனர் ராமதாஸ், ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி வெற்றி பெற்றதன் மூலமாக பாமகவின் 32 ஆண்டு கால தொடர் போராட்டம் மற்றும் தியாகம் வெற்றி பெற்றது’ என்று கூறியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact Check/ Verification: விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நேர்மறையான, எதிர்மறையான, நடுநிலையாக என்று குவிந்து வந்த கருத்துக்கள் ஏராளம். இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் வெற்றியாளராக 100 நாட்கள் தாண்டி பிக்பாஸ் வீட்டிற்குள் தாக்குப்…