Vijayalakshmi Balasubramaniyan

  • பிரதமர் மோடி, அன்னா ஹசாரேவுடன் இருக்கும் புகைப்படமா இது?

    பிரதமர் மோடி, அன்னா ஹசாரேவுடன் இருக்கும் புகைப்படமா இது?

    பிரதமர் மோடி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் இருக்கும் புகைப்படம் என்று புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. Fact check/ Verification: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, 2011 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ஊழல் குற்றங்களுக்கு எதிராக லோக்பால் மசோதாவை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டவர். தற்போது, விவசாயிகளுக்காக அவர்களது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் கடைசி கட்டப் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடி அன்னா ஹசாரேவுடன் இருக்கும் புகைப்படம் என்று…

  • வீரமங்கை வேலுநாச்சியார் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாரா நயன்தாரா?

    வீரமங்கை வேலுநாச்சியார் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாரா நயன்தாரா?

    வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் முன்னணி ஊடகங்களில் செய்தி ஒன்று வைரலாகியது. Fact check/ Verification: தமிழகத்தில் 17 ஆம் நூற்றாண்டில், சிவகங்கை பகுதியை ஆட்சி செய்து வந்த அரசி வீரமங்கை வேலுநாச்சியார். இவர், கிழக்கிந்திய கம்பெனி காலூன்றி இந்தியாவை ஆட்சி புரிந்த காலத்தில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்டக் களத்தில் போராடிய வீராங்கனை என்று சரித்திரம் சொல்கிறது. இந்நிலையில், வீரமங்கை வேலுநாச்சியாரின் சுயசரிதம் திரைப்படமாக…

  • தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர் விஜய் தன்னை சந்தித்தது குறித்து இவ்வாறு பதிவிட்டாரா?

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர் விஜய் தன்னை சந்தித்தது குறித்து இவ்வாறு பதிவிட்டாரா?

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நடிகர் விஜய் சந்தித்து பேசியது குறித்து முதல்வர், “படிக்காதவன் படத்தில் விவேக் காலில் விழுந்து கெஞ்சியது போல் விஜயும் என் காலில் விழுந்து இன்று கெஞ்சினார்” என்று ட்விட் போட்டதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. Fact Check/ Verification: நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. ஆனால், தமிழகத்தில் கொரோனா நோய்…

  • தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 மே மாதம், 24ஆம் தேதி நடைபெறுகிறதா?

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 மே மாதம், 24ஆம் தேதி நடைபெறுகிறதா?

    தமிழக சட்டமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க தலைமையிலான ஆட்சியின் ஐந்தாண்டு காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, வருகின்ற மே மாதம் 24ஆம் தேதியன்று தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் துவங்கிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact Check/ Verification: தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாண்டுகள் ஆட்சி, வருகின்ற 2021 ஆம் ஆண்டுடன் காலாவதியாகிறது. ஐந்தாண்டுகள் முடிவடையும் நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகளும் இப்போதே…

  • மாட்டு மூத்திரத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு அமெரிக்கா பேட்டண்ட் பெற்றுள்ளதா?

    மாட்டு மூத்திரத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு அமெரிக்கா பேட்டண்ட் பெற்றுள்ளதா?

    “மாட்டு மூத்திரத்தில் இருந்து கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கலாம் என்று ஆராய்ந்து கண்டுபிடித்து அமெரிக்காகாரன் அதற்கு காப்புரிமை பெற்றுவிட்டான்” என்கிற ரீதியிலான புகைப்படம் ஒன்று குறித்த உண்மையறியும் சோதனை நம்மிடம் வந்திருந்தது. Fact check/Verification: “இந்தியர்கள் பலரும் மாட்டு மூத்திரம் (அ) கோமியத்தின் பலன்கள் பற்றி அறியாமல் பசு மூத்திரம் குடிப்பவர்கள் என்று கேலி பேச வைத்துவிட்ட அமெரிக்கா. ஆனால், கோமியத்தில் இருந்து தயாரிக்கப்படும் கேன்சர், ஆன்ட்டி பயாடிக், ஆன்ட்டி இன்பெக்‌ஷன் உள்ளிட்ட உடல்நலக்குறைபாடுகளுக்கு எதிரான மருந்துகளுக்கு யாரும்…

  • எடப்பாடி பழனிச்சாமி, ‘பிக்பாஸ் பாக்க மாட்டேன்;ப்ரோமோ தான் பார்ப்பேன்’ என கமலுக்கு பதிலளித்தாரா?

    எடப்பாடி பழனிச்சாமி, ‘பிக்பாஸ் பாக்க மாட்டேன்;ப்ரோமோ தான் பார்ப்பேன்’ என கமலுக்கு பதிலளித்தாரா?

    எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், “முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்கிற கமல்ஹாசனின் ட்விட்டிற்கு பதிலளிக்கும் வகையில் ‘பிக்பாஸ் பார்க்க மாட்டேன்;ப்ரோமோ தான் பார்ப்பேன்’ என்று ட்விட் போட்டதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்று பரவியது. Fact check/Verification: தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சார முன்னெடுப்புகள் இப்போதே சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன.இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் `கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்து பல குடும்பங்கள் கெட்டுப் போகின்றன’ என்று கூட்டம்…

  • இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ‘டயமாட்டோல்’ என்கிற பொருள் பெட்ரோலில் சேர்க்கப்படுகிறதா?

    இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ‘டயமாட்டோல்’ என்கிற பொருள் பெட்ரோலில் சேர்க்கப்படுகிறதா?

    இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்த ‘டயமாட்டோல்’ என்னும் பொருள் பெட்ரோலில் கலந்து விற்பனை செய்யப்படுவதால் பெட்ரோல் பாதி விலைக்கு விற்பனையாகிறது; இது மக்களுக்குத் தெரியாத காரணத்தினால் பிரதமர் பழி சுமக்கிறார் என்பதாக சமூக வலைத்தள செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. Fact check/ verification: அன்றாட வாழ்வில் அத்தியாவசியமான எரிபொருளாகப் பயன்படும் பெட்ரோல் விலையேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர்…

  • தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்த ஆண்டு பதக்கம் வென்றாரா ஜெயவீணா?

    தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்த ஆண்டு பதக்கம் வென்றாரா ஜெயவீணா?

    ` ஜெயவீணா, நடிகர் தலைவாசல் விஜய் மகள், இந்த வருடம் நடைபெற்று வருகின்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நீச்சல் பிரிவில் கலந்து கொண்டு பதக்கம் வென்றார் ’என்கிற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact check/Verification: சினிமா உலகில் மொழி வேறுபாடின்றி 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் திறமையாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் தலைவாசல் விஜய். நடிகராக இருந்தபோதிலும் தனது இரண்டு குழந்தைகளையும் அவர்களுடைய திறமைக்கு மரியாதை அளித்து விளையாட்டுத் துறையில் ஜொலிக்கச் செய்துள்ளார். இவரது…

  • ஒபாமா ‘மோடியுடன் கைகுலுக்கியதற்கு வெட்கப்படுகிறேன்’ என ட்விட்டரில் பதிவிட்டாரா?

    ஒபாமா ‘மோடியுடன் கைகுலுக்கியதற்கு வெட்கப்படுகிறேன்’ என ட்விட்டரில் பதிவிட்டாரா?

    அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ‘இவருடன் கைகுலுக்கியதற்கு இன்று நான் வெட்கப்படுகிறேன்’ என்று பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Fact Check/ Verification: புதிதாக ஏற்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்காண விவசாயிகள், தலைநகர் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த மூன்று வாரங்களாகத் தொடர்ந்துப் போராடி வருகின்றனர். போராட்டம் தொடங்கி ஏறக்குறைய…

  • டெல்லி விவசாயிகள் போராட்டத்தை நிறுத்த ராணுவ வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டனவா?

    டெல்லி விவசாயிகள் போராட்டத்தை நிறுத்த ராணுவ வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டனவா?

    டெல்லியில் நடைபெற்று வருகின்ற விவசாயிகள் போராட்டத்தை நிறுத்துவதற்காக ஆளும் மத்திய அரசு ராணுவப் படையை அனுப்பி வைத்துள்ளதாகவும், டெல்லி நோக்கி அணிவகுக்கும் ராணுவ வாகனங்கள் இவை என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. Fact check/Verification: டெல்லியில் வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து நடைபெற்று வருகின்ற விவசாயிகள் போராட்டம் குறித்து பரவும் போலிச் செய்திகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், டெல்லியில் நடைபெறுகின்ற விவசாயிகள் போராட்டத்தை நிறுத்த, மத்திய அரசு அங்கே…