இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

தமிழிசை முன்னால் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டதாக பரவும் பழைய வீடியோ!
அண்மையில் தமிழிசை முன்னால் ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டதாக பரவும் வீடியோ 2018 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும்.

தூத்துக்குடியில் கனிமொழி விரட்டியடிக்கப்பட்டாரா?
தூத்துக்குடியில் கனிமொழி விரட்டியடிக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு நேரில் பாரத் ரத்னா வழங்கிய குடியரசுத்தலைவருக்கு இருக்கை வழங்கப்படவில்லையா?
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு அவரது வீட்டிற்கு சென்று நேரில் பாரத் ரத்னா விருதினை வழங்கிய குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு ஆசனம் அளிக்கப்படாமல் நிற்க வைக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.

அருணாச்சல் பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு விட்டிருக்கிறோம் என்றாரா அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்?
அருணாச்சல் பகுதிகளை சீனாவிற்கு குத்தகைக்கு விட்டிருக்கிறோம் என்று அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

கருணாநிதியை திருடன் என்றாரா சுப.வீரபாண்டியன்?
கருணாநிதியை திருடன் என்று சுப.வீரபாண்டியன் கூறியதாக பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)