இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

கோவை சுயமரியாதை பேரணியில் இளைஞர் அணிந்துவந்த உடை என்று பரவும் கொல்கத்தா புகைப்படம்!
கோவை சுயமரியாதை வானவில் பேரணியில் இளைஞர் ஒருவர் அணிந்துவந்த மெல்லிய உடை என்று பரவும் புகைப்படம் கொல்கத்தா பேரணியில் எடுக்கப்பட்டதாகும்.

கள்ளச்சாராயத்தால் பலியானவர்களின் உடலை வாங்க வேண்டாம் என்று அண்ணாமலை கூறினாரா?
கள்ளச்சாராயத்தால் பலியானவர்களின் உடலை வாங்க வேண்டாம் என்று பாதிக்கப்பட்டோரிடம் அண்ணாமலை கூறியதாக பரப்பப்படும் வீடியோ ஒன்பது மாதங்களுக்கு முந்திய பழைய வீடியோவாகும். இவ்வீடியோவுக்கும் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: பாஜக நிர்வாகி தேடப்படுவதாக பரவும் போலி நியூஸ்கார்டு!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் பாஜக நிர்வாகி ரவி என்பவர் தேடப்படுவதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.

பொள்ளாச்சியில் காற்றில் பறந்த அரசு பேருந்து மேற்கூரை என்று பரவும் 2019ஆம் ஆண்டு வீடியோ!
பொள்ளாச்சியில் காற்றில் பறந்த அரசு பேருந்து மேற்கூரை என்று பரவும் வீடியோ நிகழ்வு கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றதாகும்.

ஒரே செல்போன் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்தினால் கட்டணம் விதிக்க உள்ளதா டிராய்?
ஒரே செல்போன் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்துபவர்களுக்கு டிராய் கட்டணம் விதிக்கவுள்ளதாகப் பரவும் தகவல் போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)