Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

நிதிஷ் குமாரைக் கண்டவுடன் மரியாதையாக எழுந்து நின்ற மோடி என்று பரவும் வீடியோவின் பின்னணி என்ன?
நிதிஷ் குமாரைக் கண்டவுடன் மரியாதையாக எழுந்து நிற்கும் மோடி என்று பரவும் வீடியோ பழையதாகும்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகின்றாரா?
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவிருப்பதாக பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவையாகும்.

தூத்துக்குடி எம்பி கனிமொழி ’சமோசாவைக் காப்பாற்றுவோம்’ என்கிற பதாகையை கைகளில் ஏந்தியிருந்தாரா?
தூத்துக்குடி எம்பி கனிமொழி ‘சமோசாவைக் காப்பாற்றுவோம்’ என்கிற பதாகையைக் கைகளில் ஏந்தியிருந்ததாகப் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

அண்ணாமலையால் அறைக்குள் நடந்ததை சொல்லக்கூட முடியாது என்றாரா தமிழிசை செளந்தரராஜன்?
அண்ணாமலையால் அறைக்குள் நடந்ததை சொல்லக்கூட முடியாது என்று பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

தமிழிசை சௌந்தரராஜனின் போஸ்டரில் பாஜகவினர் வாயை தைத்து போரட்டம் நடத்தினரா?
தமிழிசை சௌந்தரராஜனின் போஸ்டரில் பாஜகவினர் வாயை தைத்து போரட்டம் நடத்தியதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)