Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறன் ஐடன் மார்க்ரமிற்கு முத்தம் கொடுத்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?
கலாநிதி மாறன் மகளும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளருமான காவ்யா மாறன், தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரமிற்கு முத்தம் கொடுத்ததாகப் பரவும் வீடியோ போலியானதாகும்.

ஜியு போப் எழுதிய புத்தகத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் காணப்படுகிறாரா?
ஜியு போப் எழுதிய புத்தகத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் காணப்படுவதாக பரவிய செய்தி தவறானதாகும். அப்புத்தகம் சத்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமிகள் என்பவரால் எழுதப்பட்டது; மேலும், அதன் அட்டைப்படத்தை வரைந்தவர் பிரபல ஓவியர் எஸ்.ராஜம் ஆவார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக சத்தியம் செய்தனரா?
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக கூறி சத்தியம் செய்ததாக பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோவில் இருப்பவர்கள் இந்தியாவிற்கு உட்பட்ட உரி பகுதியை சார்ந்தவர்களாவர்.

பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறையின் சாவியுடன்தான் மோடி திரும்ப செல்வார் என்று அண்ணாமலை கூறினாரா?
தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறையின் சாவியுடன்தான் திரும்ப செல்வார் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் காலணியை நக்கியவர் என்று இழிவாக பேசினாரா அண்ணாமலை?
சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் காலணியை நக்கியவர் என்று அண்ணாமலை கூறியதாக பரப்பப்படும் வீடியோத்தகவல் தவறானதாகும். அண்ணாமலை சாவர்க்கருக்கு ஆதரவாக பேசிய வீடியோவில் ஒரு பகுதியை மட்டும் வைத்து இந்த பொய் தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)