இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் பாஜகவுக்கே ஓட்டு விழுந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதா?
மணிப்பூரில் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் பாஜகவுக்கே ஓட்டு விழுந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நபருக்கு ஷூவில் தண்ணீர் கொடுக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஷூ மூலமாக தண்ணீர் குடிக்க கொடுக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

அசாமில் பாஜக வேட்பாளருக்காக ஒரே நபர் 5 முறை வாக்களித்ததாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?
அசாமில் பாஜக வேட்பாளருக்காக ஒரே நபர் 5 முறை வாக்களித்ததாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ST, SC, OBC இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்றாரா அமித் ஷா?
மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ST, SC, OBC இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்று அமித் ஷா கூறியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

குஜராத்தில் ராகுல் காந்தி ரோடு ஷோ என்று பரவும் தவறான வீடியோ!
குஜராத்தில் ராகுல் காந்தி ரோடு ஷோ நடத்தியதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)