Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

நாதக-5, பாஜக கூட்டணி-0; வைரலாகும் புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு உண்மையானதா?
“நாதக 5 இடங்களில் வெற்றி பெறும்; பாஜக கூட்டணி பூஜ்ஜிய இடங்களையே பெறும்” என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்ட போலி புகைப்படமாகும்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் ராகுல் காந்தி பாங்காங் செல்ல உள்ளதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் ராகுல் காந்தி பாங்காங் செல்ல இருப்பதாகப் பரவும் போர்டிங் பாஸ் புகைப்படம் போலியானதாகும்.

இந்தியா கூட்டணியினரையும் ராகுல் காந்தியையும் மம்தா பானர்ஜி திட்டினாரா?
இந்தியா கூட்டணியினரையும் ராகுல் காந்தியையும் மம்தா பானர்ஜி திட்டியதாக பரப்பப்படும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும்.

அம்பானி குடும்பத்தினர் தங்க உடையில் மின்னுவதாகப் பரவும் AI புகைப்படங்கள்!
அம்பானி குடும்பத்தினர் தங்கத்தால் ஆன உடையில் மின்னுவதாகப் பரவும் புகைப்படங்கள் AI மூலமாக உருவாக்கப்பட்டவையாகும்.

அண்ணாமலை ஒரு பூத்தில் ‘ஒத்த ஓட்டு’ மட்டும் வாங்கினாரா?
அண்ணாமலை ஒரு பூத்தில் ஒத்த ஓட்டு மட்டும் வாங்கியதாக கூறி பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் அந்த பூத்தில் அண்ணாமலை 101 ஓட்டு வாங்கியுள்ளார்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)