இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

மதுவந்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றாரா அண்ணாமலை?
அண்ணாமலை மதுவந்தி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதாக பரவும் தகவல் தவறானதாகும்.

லிப்டில் பயணிக்கும் பெண்களிடம் நகை பறிப்பு செய்யப்படுவதாகப் பரவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ!
லிப்டில் பயணிக்கும் பெண்களிடம் அவர்களை மயக்கமாக்கி நகைகள் பறிக்கப்படுவதாகப் பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்டதாகும்.

குஜராத்தில் ராகுல் காந்தியின் தெருமுனை பிரச்சாரம் என்று பரவும் கேரளா வீடியோ!
குஜராத்தில் ராகுல் காந்தி நடத்திய தெருமுனை பிரச்சாரம் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

இந்து நாய்களின் ஓட்டுகள் எங்களுக்குத் தேவையில்லை என்றாரா திருமாவளவன்?
இந்து நாய்களின் ஓட்டுகள் எங்களுக்குத் தேவையில்லை என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

நாதக 19 சதவீதம் வாக்குகள் பெறும் என்று நியூஸ் 18 தமிழ்நாடு கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?
தமிழ்நாட்டில் நாதக 19 சதவீதம் வாக்குகள் பெறும் என்று நியூஸ் 18 தமிழ்நாடு கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்ட போலி புகைப்படமாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)