Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

ஸ்டாலினிடம் ₹200 படிக்காசு பெற்றுக்கொண்டேன் என்றாரா வன்னி அரசு?
ஸ்டாலினிடம் ₹200 படிக்காசு பெற்றுக்கொண்டேன் என்று எக்ஸ் தளத்தில் வன்னி அரசு பதிவிட்டதாக பரவும் ஸ்க்ரீன்ஷாட் அவர் பெயரில் இயங்கும் போலிக் கணக்கில் பதிவிடப்பட்டதாகும்.

சிறையில் இருந்து வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவாலை அடித்த நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?
சிறையில் இருந்து வெளிவந்த அரவிந்த் கெஜ்ரிவாலை அடித்த நபர் என்று பரவும் வீடியோ 2019ஆம் ஆண்டு நடைபெற்றதாகும்.

குடிபோதையில் குழந்தைகளைக் கொடூரமாகத் தாக்கும் நபரின் வீடியோ தமிழகத்தைச் சேர்ந்ததா?
குடிபோதையில் குழந்தைகளைக் கொடூரமாகத் தாக்கும் நபரின் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் எடுக்கப்பட்டதாகும்.

இந்து கோயிலை இடித்துக் கட்டப்பட்ட தென்காசி மசூதி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
இந்து கோயிலை இடித்துக் கட்டப்பட்ட தென்காசி பொட்டல்புதூர் மசூதி என்று பரவும் வீடியோ தகவல் போலியானதாகும்.

பிரதமர் மோடியின் திருமண படமா இது?
பிரதமர் மோடியின் திருமண படம் என்று வைரலாகும் படம் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)