Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:


வாட்சாப் செயலியை நிறுத்தி வைக்க பிரதமர் உத்தரவிட்டாரா?
வாட்சாப் செயலியை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு நிறுத்தி வைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் பென் காரிஸ்ஸன் இந்திய ஊடகங்களை கேலி செய்து கேலிச் சித்திரம் வரைந்தாரா?
பென் காரிஸ்ஸன் இந்திய ஊடகங்களை கேலி செய்து கேலிச் சித்திரம் வரைந்ததாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

ஷ்யாம் சிங்கா ராய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதா?
ஷ்யாம் சிங்கா ராய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல் தவறானதாகும்.

ஈழத் தமிழர்களுக்கு தரும் இலவசங்களை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று சீமான் பேசினாரா?
ஈழத் தமிழர்களுக்கு தரும் இலவசங்களை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)