Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:-

கணினியை இயக்கத் தெரியாததால் பட்ஜெட் உரையை புறக்கணித்தனரா அதிமுகவினர்?
கணினியை இயக்கத் தெரியாததால் அதிமுகவினர் பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணித்தனர் என்று பரவுகின்ற நியூஸ் கார்டு செய்தி எடிட் செய்யப்பட்டதாகும்.

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் சிக்கிய பணம் மற்றும் நகை புகைப்படமா இது?
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகை என்று பரவுகின்ற புகைப்படத் தகவல் தவறானதாகும்.

பிரதமர் மோடிக்கு என் வெற்றியைக் கொண்டாட தகுதியில்லை என்று கூறினாரா நீரஜ் சோப்ரா?
பிரதமர் மோடிக்கு என் வெற்றியைக் கொண்டாட தகுதியில்லை என்று ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கூறியதாகப் பரவும் செய்தி தவறானதாகும்.

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் தங்கத்தாலான கழிப்பறையா?
முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் தங்கத்தாலான கழிப்பறை இருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

பாஜகவை கொச்சைப்படுத்தினால் தொழிலுக்கு பிரச்சனை கொடுப்போம் என்றாரா அண்ணாமலை?
பாஜகவை கொச்சைப்படுத்தினால் தொழிலுக்கு பிரச்சனை கொடுப்போம் என்ற தொனியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)