Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் முடிந்துவிட்ட ஒன்று, அதுக்குறித்து பேசி பயனொன்றும் இல்லை என்று அண்ணாமலை பேசியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்து, குஜராத் முதல்வர் உயிரிழந்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

திமுக ராஜ்ய சபா உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் மேடைக்கு கீழே உட்கார வைக்கப்பட்டார் என்று தினமலர் நாளிதழில் செய்தி ஒன்று வந்துள்ளது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

யோகி ஆதித்யநாத் வருகையை ஒட்டி கேரள பாஜக தொண்டர்கள் அமைத்த மனித தாமரை உருவாக்கம் என்று பரவுகின்ற புகைப்படத்தகவல் தவறானதாகும்.

பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து `உங்க இஷ்டப்படி கூட்டணி வைக்க வேண்டும் என்றால் சோறு திங்க முடியாது’ என்று கூறியதாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)