இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

ஒளிப்பதிவு திருத்த மசோதாவை திரும்ப பெறாவிட்டால் திரையுலகை விட்டு விலகுவேன் என்றாரா சீனுராமசாமி?
ஒளிப்பதிவு திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் திரையுலகை விட்டு விலகுவேன் என்று சீனுராமசாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

லண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கும் திப்பு சுல்தான் புகைப்படம் என்று பரவும் வதந்தி!
லண்டன் அருங்காட்சியகத்தில் இருக்கும் மாவீரன் திப்பு சுல்தான் புகைப்படம் என்று பரவுகின்ற தகவல் தவறானதாகும்.

நடிகர் கார்த்தி, மற்றும் இயக்குனர்களான கார்த்திக் சுப்புராஜ், தங்கர்பச்சான் ஆகியோர் ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனரா?
கார்த்தி, கார்த்திக் சுப்புராஜ், தங்கர்பச்சான் ஆகியோர் ஒளிப்பதிவு திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறி நியூஸ்கார்டுகள் சில சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

யோகி அரசின் சாதனை என்று பகிரப்படும் புகைப்படத்தில் இருப்பது உபி மருத்துவமனையா?
யோகி அரசின் சாதனை என்று பகிரப்படும் நியூஸ்கார்டில் இடம்பெற்றிருக்கும் மருத்துவமனை புகைப்படம் உபி மருத்துவமனையின் புகைப்படம் அல்ல.

அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறையை பிரதமர் மோடிக்கு ஒதுக்கியதை கிண்டலடித்து செய்தி வெளிட்டதா சன் நியூஸ்?
அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறை பிரதமர் மோடிக்கு ஒதுக்கப்பட்டதை கிண்டலடித்து சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாக, நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)