Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

நான் விமானத்தில் பயணிப்பதால் ஒடிசா ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?
நான் விமானத்தில் பயணிப்பதால் ஒடிசா ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானதாகும்.

Fact Check: முகமது ஷெரீப் அகமது என்ற பெயர் கொண்ட ஒடிசா ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் தலைமறைவா?
முகமது ஷெரீப் அகமது என்ற பெயர் கொண்ட விபத்து நடந்த ஒடிசா ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் தலைமறைவு என்று பரவும் செய்தி போலியானதாகும்.

தவறானவர்களின் கையில் செங்கோல் கொடுக்கப்பட்டதன் நிமித்த செய்தியே ஒடிசா ரயில் விபத்து என்று திருவாவடுதுறை ஆதினம் கூறினாரா?
தவறானவர்களின் கையில் செங்கோல் கொடுக்கப்பட்டதன் நிமித்த செய்தியே ஒடிசா ரயில் விபத்து என்று திருவாவடுதுறை ஆதினம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.

ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமரின் வேலை இல்லை என்றாரா ஈபிஎஸ்?
ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமரின் வேலை இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

யானைக்கு இறைச்சி தந்த முஸ்லீம் நபரை யானை தாக்கியதா?
கேரளாவில் யானைக்கு இறைச்சி தந்த முஸ்லீம் நபரை யானை தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் பொய்யானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)