இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

மாணவிகள் மட்டும் படிக்கும் பள்ளிகளில் ஆசிரியைகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாரா அமைச்சர் அன்பில் மகேஷ்?
மாணவிகள் மட்டுமே படிக்கும் மகளிர் பள்ளிகளில் முழுக்க முழுக்க ஆசிரியைகளை மட்டும் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாகப் பரவிய செய்தி தவறான புரிதலால் வெளியாகியுள்ளது.

வித்தியாசமாக சத்தம் எழுப்பும் அதிசய பாம்பு! வைரலாகும் வீடியோ உண்மையானதா?
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் வித்தியாசமாக சத்தம் எழுப்பிய பாம்பு என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர் ரூபாய் 4 லட்சம் நிதி உதவி பெறுவதற்கான படிவமா இது?
கொரோனாவால் இறந்தவர்களுக்கு மத்திய அரசு, பேரிடர் மேலாண்மை அமைச்சகத்தில் இருந்து அவர்களுடைய குடும்பத்தினருக்கு ரூபாய் 4 லட்சம் நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்ப படிவம் என்று பரவும் தகவல் தவறானதாகும்.

கருப்பு பூஞ்சை நோய் பிராய்லர் கோழி மூலம் பரவுவதாக வதந்தி!
கருப்பு பூஞ்சை நோய் பிராய்லர் கோழி மூலம் பரவுவதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளை கண்டறிய 5 நிமிடம் ஆக்ஸிஜனை நிறுத்தினோம் என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா?
ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளை கண்டறிய 5 நிமிடம் ஆக்ஸிஜனை நிறுத்தினோம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)