இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

டி.கே.சிவக்குமார் கர்நாடக தேர்தலில் வெற்றியடைந்த பின் பாட புத்தகத்தை கிழித்தாரா?
கர்நாடக தேர்தலில் வெற்றியடைந்த பின் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் பாட புத்தகத்தை கிழித்ததாக வைரலாகும் வீடியோ பழைய வீடியோவாகும்.

‘எம்.ஜி.ஆர் காலத்திலேயே சாராயம் காய்ச்சியவன் நான்’ என்று ஈபிஎஸ் கூறினாரா?
‘எம்.ஜி.ஆர் காலத்திலேயே சாராயம் காய்ச்சியவன் நான்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

Fact Check: உலகின் மிகப் பெரிய விமான நிலையம் உத்தரபிரதேசத்தில் அமைகிறதா?
உலகின் மிகப் பெரிய விமான நிலையம் உத்தரபிரதேசத்தில் அமைகிறது என்பதாகப் பரவுகின்ற தகவல் ஒரு நையாண்டிப் பதிவு ஆகும்.

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு மக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்தாரா?
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு மக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து என்று பரவும் புகைப்படம் போலியானதாகும்.

திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!
திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோ ஒரு புனைவு வீடியோவாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)