இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

தமிழக பாஜக என்னும் தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார் அண்ணாமலை என்று கூறினாரா ஹெச்.ராஜா?
தமிழக பாஜக என்னும் தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார் அண்ணாமலை என்று ஹெச்.ராஜா கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

திமுக ஆட்சியில் கொடிவேரி அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்டதாக பரவும் பழைய வீடியோ!
திமுக ஆட்சியில் கொடிவேரி அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்டதாக வைரலான வீடியோ ஒரு பழைய வீடியோவாகும்.

திமுக ஆட்சி முடியும் வரை சிறிய படங்கள் தயாரிக்க வேண்டாம் என்றாரா விஷால்?
திமுக ஆட்சி முடியும் வரை சிறிய படங்கள் தயாரிக்க வேண்டாம் என்று விஷால் கூறியதாக பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

விமான பைலட்கள் போல் அசத்தும் வந்தே பாரத் ரயில் ஓட்டுநர்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
விமான பைலட்கள் போல அசத்தும் வந்தே பாரத் லோகோ பைலட்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

பாஜக கூட்ட பேனரில் அண்ணாமலை படம் புறக்கணிக்கப்பட்டதா?
பாஜக கூட்ட பேனரில் அண்ணாமலை படம் புறக்கணிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)