இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.


குரூப் 2 விடைத்தாள்கள் தண்ணீரில் நனைந்து விட்டதா?
குரூப் 2 விடைத்தாள்கள் தண்ணீரில் நனைந்து விட்டதால் தேர்வு முடிவுகள் தாமதமாவதாக வந்த செய்தி தவறானதாகும்.

ஜெயலலிதா காலில் ப.சிதம்பரம் விழுந்தாரா?
மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலில் ராஜ்ய சபா உறுப்பினர் ப.சிதம்பரம் விழுந்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

தேவதாசி முறை மீண்டும் வேண்டும் என்றாரா நடிகை கஸ்தூரி?
தேவதாசி முறை மீண்டும் வேண்டும் என்று நடிகை கஸ்தூரி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)