இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

பங்காரு அடிகளாருக்கும் சீமானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மேல்மருவத்தூர் சித்தர் பீடம் மறுத்ததா?
பங்காரு அடிகளாருக்கும் சீமானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மேல்மருவத்தூர் சித்தர் பீடம் மறுப்பு தெரிவித்ததாக வைரலாகும் அறிக்கை போலியானதாகும்.

அடையார் ஆனந்த பவன் சங்கிகளுக்கு அனுமதி இல்லை என்றதா?
சங்கிகளுக்கு அனுமதி இல்லை என்று அடையார் ஆனந்த பவன் அறிவிப்பு பலகை வைத்ததாக வைரலாகும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

காமாக்யா தேவியின் முகம் 15 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்கு காட்டப்படுகிறதா?
காமாக்யா தேவியின் முகம் 15 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்கு காட்டப்படுவதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

வாரணாசி மெட்ரோ ரயில் நிலையம் என்று பரவும் AI உருவாக்க புகைப்படம்!
வாரணாசி மெட்ரோ ரயில் நிலையம் என்று பரவும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.

எடப்பாடி பழனிசாமி கட்சியின் பெயர் கூட அறியாதவர் என்றாரா செல்லூர் ராஜு?
எடப்பாடி பழனிசாமி கட்சியின் பெயர் கூட அறியாதவர் என்று செல்லூர் ராஜு கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)