Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அந்த வகையில் இந்த வாரம் பிரசுரமாகிய செய்திகளுள் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு:


ராகுல் காந்தியின் செல்வாக்கு மற்ற தேசியத் தலைவர்களை காட்டிலும் அதிகரித்துள்ளது என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?
ராகுல் காந்தியின் செல்வாக்கு மற்ற தேசியத் தலைவர்களை காட்டிலும் அதிகரித்துள்ளது என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானியை இந்தியப் பிரதமர் என்று செய்தி வெளியிட்டதா சன் நியூஸ்?
அதானியை இந்தியப் பிரதமர் என்று குறிப்பிட்டு சன் நியூஸ் செய்தி வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷமிட்ட பெண்ணை சந்தித்தாரா ராகுல் காந்தி?
பாரத் ஜோடோ யாத்திரையின்போது பாகிஸ்தான் வாழ்க என்ற கோஷமிட்ட பெண்ணை ராகுல் காந்தி சந்தித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

300 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் இருப்பதாக வதந்தி
300 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதியான சித்தர் உயிருடன் இருப்பதாக பரவும் தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)