Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

என் வாழ்க்கையை அழித்தது ரஜினிதான் என்று மனீஷா கொய்ராலா கூறியதாக பொய் செய்தி!
என் வாழ்க்கையை அழித்தது ரஜினிதான் என்று மனீஷா கொய்ராலா கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

கொரோனா பரவலால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் முழு ஊரடங்கு என்று பரவும் வதந்தி!
கொரோனா பரவலால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானதாகும்.

நடிகை கஸ்தூரி அதிமுகவில் இணைந்ததாக பரவும் வதந்தி!
நடிகை கஸ்தூரி அதிமுகவில் இணைந்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

Fact Check: கனடாவில் மீன் தாக்கியதில் உருக்குலைந்த கப்பல் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
கனடாவில் சுறா மீன் தாக்கியதில் உருக்குலைந்த கப்பல் என்று பரவும் வீடியோ உண்மையில் AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.

பிரதமர் மோடிக்கு மேக்கப் போடும் பெண்ணிற்கு 15 லட்சம் சம்பளம் என்று பரவும் போலி புகைப்படத்தகவல்!
பிரதமர் மோடிக்கு மேக்கப் போடும் பெண்ணிற்கு 15 லட்சம் சம்பளம் என்று பரவுகின்ற புகைப்படத்தகவல் போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)