Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தை தவிர்க்க தமிழக அரசு அதிரடி உத்தரவு என்று பரவும் செய்தியில் முழு உண்மை தெரிவிக்கப்படவில்லை.

பிரதமருக்கு ‘மோடி 420’ என்று எழுதப்பட்ட டி-சர்ட் பரிசளிக்கப்பட்டதாக பரவும் புகைப்படம் போலியானதாகும்.

ஐந்தாயிரம் ரூபாயில் 2,500 கழிந்தால் 1500 ரூபாய் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.

மதுரையில் பெண்களுக்கென்று தனியாக மதுக்கூடம் தொடங்கப்பட்டுள்ளதாக பரவும் பத்திரிக்கை செய்தி இரண்டு வருடங்களுக்கு முந்தையதாகும்.

கேரள மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வைரலாகும் செய்தி தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)