இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

அயோத்தி ராமரைப் பார்த்து கண்ணீர் விட்ட புகைப்படக் கலைஞர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
அயோத்தி ராமர் சிலையை பார்த்து கண்ணீர் விட்ட புகைப்படக் கலைஞர் என்று பரவும் புகைப்படச் செய்தி போலியானதாகும்.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் கவலையில்லை என்றாரா துரைமுருகன்?
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் கவலையில்லை என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியதாக பரவும் வீடியோ பழைய வீடியோவாகும்.

நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான் என்றாரா வானதி சீனிவாசன்?
நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான் என்று வானதி சீனிவாசன் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றாரா பிரசாந்த் கிஷோர்?
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாகும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
மோடி மீண்டும் ஆட்சி அமைத்தால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் செய்தி போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)