இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

விஜய்யை கூட்டணிக்கு அழைத்தாரா சீமான்?
சீமான் விஜய்யை கூட்டணிக்கு அழைத்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

புஸ்ஸி ஆனந்த் காலில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் விழுவதாக பரவும் 2022ஆம் ஆண்டு புகைப்படம்!
புஸ்ஸி ஆனந்த் காலில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் விழுவதாக பரவும் புகைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

திமுக ஆட்சியில் குறைந்த பின் சக்கரங்களுடன் ஓடும் அரசு பேருந்து எனப் பரவும் 2019ஆம் ஆண்டு வீடியோ!
திமுக ஆட்சியில் குறைந்த பின் சக்கரங்களுடன் ஓடும் அரசு பேருந்து என்று பரவும் வீடியோ கடந்த 2019 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும்.

விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன் என்றாரா அரவிந்த் சாமி?
விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன் என்று அரவிந்த் சாமி கூறியதாக மாலைமலர் வெளியிட்ட நியூஸ்கார்டு தவறானதாகும்.

2026ல் பாஜக ஆட்சி அமைந்தவுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றாரா அண்ணாமலை?
2026ல் பாஜக ஆட்சி அமைந்தவுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அண்ணாமலை கூறியதாக பரவிய செய்தி தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)