இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

கட்சியை கலைக்கப்போகிறேன் என்றாரா சீமான்?
கட்சியை கலைக்கப்போகிறேன் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

பாஜக வெல்லும் இடங்களில் மாட்டிறைச்சிக்கு தடை; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
பாஜக வெல்லும் இடங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

‘ஊழலை விட பாஜக எதிர்ப்பே முக்கியமானது’ என்றாரா திருமாவளவன்?
ஊழலை விட பாஜக எதிர்ப்பே முக்கியமானது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

காவல்துறை தலைமை காவலர் முதலமைச்சருக்கு எழுதியதாக பரவும் போலி புகார் கடிதம்!
காவல்துறை தலைமை காவலர் ஒருவர் முதலமைச்சருக்கு எழுதியதாக பரவுகின்ற கடிதம் போலியானதாகும்.

கோவை மாநகராட்சி 2வது வார்டில் பாஜக வேட்பாளர் வத்சலா வெற்றி பெற்றாரா?
கோவை மாநகராட்சி 2வது வார்டில் பாஜக வேட்பாளர் வத்சலா வெற்றி பெற்றதாகப் பரவிய செய்தி தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)