Thursday, April 16, 2026

Fact Check

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

banner_image

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

weekly

விஜயகாந்த் திராவிட இயக்கம் போட்ட பிச்சையால் திரைத்துறையில் வென்றார் என்றாரா மு.க.ஸ்டாலின்?

விஜயகாந்த் திராவிட இயக்கம் போட்ட பிச்சையால் திரைத்துறையில் வென்றார் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு முன்பே பற்றி எரியும் உபி ரயில் நிலையம் எனப்பரவும் வீடியோ உண்மையா?

ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு முன்பாகவே உபி ரயில் நிலையத்தில் தீவிபத்து என்று பரவும் வீடியோ மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பழைய நிகழ்வாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

பிரதமரை வரவேற்றதற்காக மு.க.ஸ்டாலினை இழிவாக பேசினாரா தமிழன் பிரசன்னா?

பிரதமரை வரவேற்றதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னா இழிவாக பேசியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

வெள்ள நிவாரணம் தரவில்லை என்று மோடியை சிறுமி அசிங்கப்படுத்தியதாக வைரலாகும் எடிட் படம்!

வெள்ள நிவாரணம் தரவில்லை என்று பிரதமர் மோடியை சிறுமி ஒருவர் அசிங்கப்படுத்தியதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

அயோத்தி ராமர் கோயிலுக்கு திருச்சி BHEL நிறுவனம் மணிகளை தயாரித்து அனுப்பியுள்ளதா?

அயோத்தி ராமர் கோயிலுக்கு திருச்சி BHEL நிறுவனம் மணிகளை தயாரித்து அனுப்பியதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

14,935

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage